முதலமைச்சருக்கு இ.பி.எஸ். கேள்வி

"எதிர்க்கட்சியாக இருந்தபோது கருப்பு கொடி.. ஆளுங்கட்சியாக இருக்கும்போது வெள்ளை கொடி.. 3 ஆண்டுகளாக சந்திக்காமல் பிரதமரை இப்போது சந்திப்பது ஏன்?" - முதலமைச்சருக்கு இ.பி.எஸ். கேள்வி

இந்தியில் வைக்கப்பட்ட அறிவிப்புகளால் சர்ச்சை

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் 69 மையங்களில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை யுபிஎஸ்சி தேர்வு நடக்கிறது. ஒரு சில மையங்களில் தேர்வு எழுதுபவர்களுக்கான அறிவிப்புகள் இந்தி மொழியில் இடம்பெற்று இருப்பது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

புறநகர மின்சார ரயில்கள் ரத்து

கவரப்பேட்டை-பொன்னேரி இடையே சிக்னல் பராமரிப்புப் பணி காரணமாக புறநகர் ரயில்கள் இன்றும் ரத்து. பகல் 1.20 முதல் மாலை 5.20 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு .19 புறநகர் ரயில்கள் முழுவதுமாகவும், 2 ரயில்கள் பகுதியாகவும் ரத்து என ரயில்வே அறிவிப்பு

சுற்றுலா தலங்களுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களான படகு இல்லம், தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம் ஆகியவை மூடப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படைகளும் அங்கு விரைந்துள்ளன.

4வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்த இந்தியா!

“ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது” என நித் ஆயோக் CEO BVR சுப்ரமணியம் தகவல். IMF தரவுகளின் அடிப்படையில் இந்தியா 4 ட்ரில்லியன் டாலர் பொருளாதரமாக உள்ளதாக குறிப்பிட்டு இதனை அறிவித்துள்ளார்.

டெல்லியில் கனமழை

டெல்லியில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 25 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. 100 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதால் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது

மத்திய மகாராஷ்டிராவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுவிழக்கக் கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

நடுக்கடலில் கவிழ்ந்த கப்பல் - 21 பேர் மீட்பு

கேரளா: கொச்சியில் நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்த விபத்தில், இதுவரை 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 24 பேர் பயணித்த நிலையில் எஞ்சியுள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரம். கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக 2 கப்பல்களும், ராணுவ ஹெலிகாப்டரும் சென்றுள்ளன

இன்றைய ஐபிஎல் போட்டி

நடப்பு சீசனில் தனது கடைசி போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணியான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது கடைசி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ். மாலை 3.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் இந்த போட்டி தொடங்க உள்ளது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.

ஆர்சிபியில் இணைந்த ஹேசல்வுட்

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக மீண்டும் ஆர்சிபி அணியுடன் இணைந்தார் வேகப்பந்து வீச்சாளர் ஜாஷ் ஹேசல்வுட். இந்திய எல்லையில் நிலவிய பதற்றம் காரணமாக சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி இருந்தார்.ஆர்சிபி அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.