TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு

TNPSC குரூப் 4 தேர்வு ஜூலை 12ல் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு. 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தேர்வுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் நடத்தும் மாநாடு - தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களும் புறக்கணிப்பு

உதகையில் ஆளுநர் ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டை, பல்வேறு தனியார் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களும் புறக்கணித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நாடாக இந்தியா ஒப்பந்தம்

ட்ரம்ப்-ன் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபரில் முதல்கட்ட ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்பு உள்ளதாகத் தகவல்.

இந்துக்கள் அப்படி செய்யமாட்டார்கள் - ஆர்எஸ்எஸ் தலைவர்

"இப்போது நடந்து கொண்டிருக்கும் சண்டை, மதங்களுக்கு இடையிலானது அல்ல, தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையேயானது. நம் மக்கள் யாரையும் அவர்களின் மதத்தைப் பற்றிக் கேட்டு கொன்றதில்லை. இந்துக்கள் ஒருபோதும் அதை செய்ய மாட்டார்கள்!" -பஹல்காம் தாக்குதல் குறித்து RSS தலைவர் மோகன் பகவத் கருத்து.

இந்தியாவிற்கு ஜாக்பாட்

செல்போன், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியை வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற சாம்சங் திட்டம். வியட்நாமில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா| 46% வரி விதித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு 10% வரி மட்டுமே விதித்துள்ளதால் இங்கு உற்பத்தி ஆலை அமைக்க நடவடிக்கை

வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்!

பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை காப்பதற்காக Advanced Chat Privacy என்ற புதிய அம்சம் வாட்ஸ் அப்-ல் அறிமுகம். இதன்மூலம் Chat export செய்வது, புகைப்படங்கள் வீடியோக்கள் தானாக பதிவிறக்கமாவதை Block செய்துகொள்ள முடியும். வாட்ஸ் அப் குரூப்களில் இருந்து தகவல் எடுக்கப்படுவதை இதை தடுக்கிறது.

'உலகின் மிக அழகானவர்' என்ற பட்டம் வென்ற 62 வயது நடிகை!

2025ல் 'உலகின் மிக அழகானவர்' என்ற People Magazine-ன் பட்டத்தை வென்றார் 62 வயதான ஹாலிவுட் நடிகை டெமி மூர்! 'வயதாவது என்பது ஒரு அற்புதமான பரிசு. நான் ஒருபோதும் கண்ணாடியைப் பார்த்து எனக்கு வயதாகிவிட்டதே.. என் முகம் வாடிவிட்டதே என்றெல்லாம் கவலைப்பட்டது கிடையாது. நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்' என மூர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் இன்றைய போட்டி

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் இதுவரை தலா 8 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ”நோ”

ஐசிசி தொடர்களில் இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என ஐசிசி-க்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பஹல்காம் தாக்குதலை பிசிசிஐ கண்டிப்பதாகவும், பாகிஸ்தானுடன் இந்தியா இருதரப்புத் தொடரில் விளையாடாது என்றும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

PSL கிரிக்கெட் தொடரில் பணியாற்றும் இந்திய தொழில்நுட்பக் கலைஞர்களை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது பாகிஸ்தான் அரசு. PSL தொடரை இந்தியாவில் ஒளிபரப்பும் தொலைக்காட்சி மற்றும் OTT நிறுவனங்கள் போட்டிகள் ஒளிபரப்புவதை நிறுத்தியுள்ளன. -பஹல்காம் தாக்குதலை அடுத்து இருநாடுகளும் மாறி மாறி நடவடிக்கைகள் எடுத்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது