Top 10 News Headlines: ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை, ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம் - டாப் 10 செய்திகள்

8 months ago 6
ARTICLE AD

ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை!

அரசுப் பள்ளிகளில் திரைப்பட பாடல்கள், சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ள தடையை மீறி புகாருக்கு உள்ளாகும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை. இதனை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி, ஒப்புதல் பெறுமாறு மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கும் உத்தரவு

பள்ளி வாசலில் கருப்புக்கொடி

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிவகங்கை மாவட்டத் தலைமை பள்ளிவாசலில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் இன்று சிறப்புத் தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வர உள்ளதாகவும், தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசலின் முன்பு மசோதாவிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பவும் உள்ளனர்.

நீட் தேர்வுக்கு முடிவு கட்டுவதில் தாமதம் காட்டக்கூடாது”

“இந்தியாவில் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. அதனால் ஏற்பட்ட பயன்கள் என்ன? பாதிப்புகள் என்ன? என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்திருந்தால், நீட் தேர்வு எந்த வகையிலும் உதவாது என்பதனை உணர்ந்து அதை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்திருக்கும். நீட் தேர்வுக்கு முடிவு கட்டுவதில் இனியும் தாமதம் காட்டக்கூடாது"-அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர்

வக்ஃபு சட்டத்திருத்தம் - காங்கிரஸ் வழக்கு தொடர முடிவு

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என காங்கிரஸ் அறிவிப்பு. இதே சட்டத்திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

18 ஆண்டுகளுக்கு பிறகு லாபம் ஈட்டிய BSNL!

BSNL நிறுவனம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாகக் கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் ரூ. 262 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக மத்திய தொலை தொடர்புத்துறை தகவல். மேலும் கடந்த 6 மாதங்களில் 55 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் BSNL சேவையில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல். ரூ.3984.86 கோடி செலவிலான இத்திட்டம் 4 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பு. தற்போது இருக்கும் ஏவுதளங்கள் 1000 டன் எடை கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாது என்பதால், 3வது ஏவுதளம் அமைக்க முடிவு

திருமண அழைப்பிதழால் போலீசில் சிக்கிய திருடர்கள்!

மகாராஷ்டிரா: கொடாலா பகுதியில் வேன் ஓட்டிச் சென்ற போரு காண்டு என்பவரை லிஃப்ட் கேட்பது போல் வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.6,85,000 பணத்தை திருடிய 3 பேர் கைது. திருட்டுக்கு பயன்படுத்திய மிளகாய் பொடியை ஒரு திருமண அழைப்பிதழில் எடுத்து சென்று அங்கேயே விட்டுள்ளனர். அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த கிரண் என்பவரை விசாரித்தபோது, தட்டு காண்டு என்பவர் நண்பர்களுடன் இணைந்து தனது சொந்த சகோதரனிடத்திலேயே திருடியது தெரியவந்துள்ளது.

பழம்பெரும் நடிகர் மனோஜ்குமார் காலமானார்

பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ்குமார் (87) உடல்நலக் குறைவால் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழப்பு. தேசப்பற்றுமிக்க படங்களில் நடித்ததற்காக பாரத் குமார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர், தாதா சாகேப் பால்கே விருது, பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.

அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவு

சரி நிகர் வரி தொடர்பான அதிபர் ட்ரம்பின் அறிவிப்பில் அமெரிக்க பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. 2.3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் நேற்று ஒரே நாளில் கரைந்துள்ளது. இருப்பினும் அமெரிக்க பொருளாதாரம் வலுவாக மீண்டு வரும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டி:

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. ஏகனா மைதானத்தில் நடைபெறும் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி, தலா ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article