முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை

"மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர் என்று ஒரு பக்கம் ஒன்றிய அரசு, மறுபக்கம் ஆளுநர் நிதி என்று எல்லா தடைகளையும் தாண்டி, சாதனை படைத்து வருகிறோம்!இது தனிமனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு | உழைப்புக்கு கிடைத்த வெற்றி. சுயமரியாதை, சமூக நீதி, மதசார்பின்மை என அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலம் என்ற நிலைக்கு உழைக்கிறோம்" -சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மீண்டும் எகிறிய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.71,840க்கும் கிராம் ரூ.8,980க்கும் விற்பனையாகிறது.

பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு

சென்னையில் பெண்களின் பாதுகாப்புக்காக 24 மணி நேரம் இயங்கக் கூடிய 'ரெட் பட்டன் - ரோபோட்டிக் காப்' என்ற நவீன கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது மாநகர காவல்துறை. இந்த கருவி, 360 டிகிரியில் சாலையின் அனைத்து பகுதிகளையும் ஆராயும். இதில் உள்ள சிவப்பு நிற பொத்தானை ஆபத்தில் இருப்பவரோ அல்லது அவருக்கு அருகில் இருப்பவரோ அழுத்துவதன் மூலம் உடனடியாக காவல்துறைக்கு அழைக்கவும், அருகில் ரோந்துப் பணியில் உள்ள காவலர்களை எச்சரிக்கைப்படுத்தவும் முடியும்!

பிரதமருக்கு ராகுல் கடிதம்

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம். “இந்த நெருக்கடியான நேரத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையாக செயல்படுகிறோம் என்பதை நாம் காட்ட வேண்டும்” -ராகுல்காந்தி, எம்.பி

அமித் ஷா உடன் சந்திப்பு

டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு. தமிழ்நாடு அரசியல் மற்றும் வருகின்ற காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியதாக தகவல்

அடையாளம் காணப்பட்ட தீவிரவாதி

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ என விசாரணையில் தகவல். இவர் அந்நாட்டு ராணுவத்தின் சிறப்புப் பிரிவான எஸ்.எஸ்.ஜி.-ஐ சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 15 பேரிடம் நடத்திய |விசாரணையில் இத்தகவல் உறுதியானது. ஹாசிம் மூஸாவை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பிற்கு பாக். ராணுவம் அனுப்பியிருக்கலாம் என தகவல்

காஷ்மீரில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடல்

ஜம்மு-காஷ்மீரில் பாதிக்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் மூடல். தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை. மொத்தமுள்ள 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்கள் மூடப்பட்டன. பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஆளும்கட்சி முன்னிலை

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 9 மணி நிலவரப்படி 196 தொகுதியில் லிபரல் கட்சியும்,107 தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சியும் முன்னிலை வகித்து வருகிறது மொத்தம் உள்ள 343 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 172 இடங்கள் தேவை என்ற நிலையில், லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் என தகவல்

ஐபிஎல் இன்றைய போட்டி

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்றால் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறக் கூடும்.

சூர்யவன்ஷி அசத்தல்

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் வீரரான சூர்யவன்ஷி வைபவ் வெறும் 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் குறைந்த வயதில் (14 வருடம் 32 நாட்கள்) ஐபிஎல் வரலாற்றில் சதம் அடித்தவர், இரண்டாவது அதிவேகமான சதம், இந்தியர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிவேக சதம் மற்றும் இளம் வயதில் ஆட்டநாயகன் விருது பெற்றவர் என பல சாதனைகளை படைத்துள்ளார்.