Top 10 News Headlines: அதிமுக வேட்பாளர்களுக்கு பிரச்னை? கோச்சிங் சென்டர்களுக்கு தடை - டாப் 10 செய்திகள்

6 months ago 7
ARTICLE AD

அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக கோரிக்கை

மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் வலியுறுத்தல். இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள இவர், தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்ரமணியனைச் சந்தித்து கோரிக்கை தேர்தல் நடத்தும் அதிகாரி அவரின் முறையீட்டை ஏற்க மறுப்பு.

கோச்சிங் சென்டர்களை தடை செய்ய பரிந்துரை

பள்ளிகளில் நடைபெறும் கோச்சிங் சென்டர்களை தடைசெய்யவோ அல்லது வரையறுக்கவோ குழு ஒன்றை அமைக்க வேண்டும் மாநில அரசுக்கு, மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரை. பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்காமலே நுழைவுத் தேர்வுக்கு மட்டுமே மாணவர்களை தயார் செய்வதாக கல்விக் கொள்கை வரையறை குழு தெரிவிப்பு.

பேருந்து பயணிகளின் கவனத்திற்கு!

அரசுப் பேருந்துகளில் UPI மூலமான பணப் பரிவர்த்தனை தோல்வியில் முடிந்தால், அடுத்த அரை மணி நேரத்தில் பயணிகளின் வங்கி கணக்கிற்கு பணம் வரும் வகையில் SBIயுடன் இணைந்து போக்குவரத்துக்கழகம் புதிய ஏற்பாடு. UPI ஆட்டோ ரீஃபண்ட் என்ற வசதியின் மூலம் விரைவாக பணம் கிடைக்க வழிவகை. தொலைத்தொடர்பு சிக்கல் காரணமாக சில நேரங்களில் பரிவர்த்தனை தோல்வியில் முடிவதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை.

அமித் ஷாவிற்கு தனி சட்டமா?

“மீனாட்சி அம்மன் கோயிலின் தாமரைக்குளம் பகுதியை தவிர மற்ற இடங்களில் மொபைல் மற்றும் கேமிராக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு ஒரு விதி, ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு ஒரு விதி என பாகுபாடு ஏன்? இந்த விதிமீறல் குறித்து கோயில் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா?" கோயிலுக்குள் அமித் ஷா புகைப்படம் எடுத்ததுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி

அநீதிக்கு பழி தீர்த்துக் கொண்ட பெண்கள்

ஒடிசா: கஜாபடி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தங்களை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது நபரை, பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து கொலை செய்து அவரின் சடலத்தை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் கைதாகினர். இதில் 6 பேர், 4 ஆண்டுகளாக பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்.

தேனிலவு கொலை - பாதிக்கப்பட்டவராக நடிக்க முயன்ற மனைவி

தேனிலவுக்காக மேகலாயா சென்று கணவரை திட்டமிட்டு கொலை செய்ததாக கைதான மனைவி, தனக்கு மயக்க மருந்து கொடுத்து, யாரோ சிலர் காஸிப்பூருக்கு கொண்டு வந்ததாக வாக்குமூலம்
மனைவி சோனம் கைதாகியுள்ள நிலையில், அவர் குறைந்த அறிவுடன் திட்டம் தீட்டி, பாதிக்கப்பட்டவர் போல நடித்ததாக கூடுதல் டி.ஜி.பி. பேட்டி

ட்ரம்ப் அரசின் முடிவை எதிர்த்து போராட்டம்!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் ட்ரம்ப் அரசின் முடிவை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸ், சான்பிரான்சிஸ்கோ பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் கடைகள், வாகனங்கள், வணிக நிறுவனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு. கலவரத்தை முன்னின்று நடத்திய 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த மேலும் 2,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு

ஆஸி., அணி பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு?

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வந்ததால் ஆஸ்திரேலிய அணி பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு எனத் தகவல். தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ENG-க்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட், 20ம் தேதி லார்ட்ஸில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தோனி பெருமிதம்

"உலகெங்கும் பல்வேறு தலைமுறையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பை கௌவுரவிக்கும் ICC HALL OF FAME-ல் என்னை சேர்த்ததை பெருமையாகக் கருதுகிறேன். தலைசிறந்த வீரர்களின் பெயர்கள் உள்ள பட்டியலில் என்னுடைய பெயரும் இருப்பது அற்புதமான உணர்வாக உள்ளது. இந்த கௌரவத்தை என் வாழ்நாள் முழுவதும் போற்றி மகிழ்வேன்” - தோனி

ஓய்வை அறிவித்த பூரான்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மே.இ.தீவுகளை சேர்ந்த, 29 வயதே ஆன  நிக்கோலஸ் பூரன் அறிவிப்பு. அதிரடி பேட்ஸ்மேன் ஆன இவர் இனி IPL, CPL, MLC போன்ற FRANCHISE கிரிக்கெட் தொடர்களில் முழுவதுமாக கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது.

Read Entire Article