Top 10 News Headlines: அடங்காத டிரம்ப்! மன்னிப்பு கேட்ட பாஜக அமைச்சர்- டாப் 10 செய்திகள்

7 months ago 8
ARTICLE AD

EWS இடஒதுக்கீடு கோரிய மனு தள்ளுபடி

உ.பி.யில் 69,000 உதவி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் EWS இடஒதுக்கீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்து அலஹாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு. ஆட்கள் பணியமர்த்தப்பட்டதால் மாற்றம் செய்ய முடியாது என நீதிபதி திட்டவட்டம்! ஆட்சேர்க்கை அறிவிப்பில் EWS ஒதுக்கீடு தெரிவிக்கப்பட்டிருந்தாலும், விண்ணப்பிக்கும் போது யாரும் தங்களை EWS பிரிவினராக குறிப்பிடவில்லை. எனவே யார் இந்தப் பிரிவில் வருகிறார்கள் என்பதை இப்போது தீர்மானிப்பது கடினம் எனவும் நீதிபதி கருத்து.

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதி

உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்! குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி சஞ்சீவ் கன்னா நேற்றுடன் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமை நீதிபதியாக கவாய் நியமனம்.

வார்டன் சஸ்பெண்ட்;

சேலம் மத்திய சிறையில் உள்ள பேக்கரியில் விற்கப்படும் பொருட்களுக்கு, தனது மாமியாரின் ஜிவ கணக்கு மூலம் பணம் பெற்று வந்த சிறை வார்டன் சஸ்பெண்ட். ஓராண்டாக சுமார் ரூ.1.80 லட்சம் மோசடி செய்துள்ளதாக தகவல் பொருட்கள் விற்பனையாகும் அதே நேரத்தில், சிறையின் கணக்கில் குறைந்த தொகையே வரவு வந்திருப்பதால் நடத்தப்பட்ட விசாரணையில், வார்டன் சுப்பிரமணியம் (35) மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து பலி ரூ.10 லட்சம் நிவாரணம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில்| கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழப்பு.இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான்.

டிரம்ப மீண்டும் சர்ச்சை:

இந்தியா - பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள்" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு இந்தியா-பாக். தாக்குதல் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை என இந்திய வெளியுறவுத் துறை விளக்கமளித்த பிறகும், வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்தியதாக சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கலில் ஐபிஎல் அணிகள்

ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகளுக்கு இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் பலரும் இருக்க மாட்டார்கள் என தகவல்.தென்னாப்பிரிக்காவுக்கு WTC இறுதிப் போட்டியும், இங்கிலாந்து அணிக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ODI தொடர் இருப்பதாலும் பல வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்ட அமைச்சர்

ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதத்தை வைத்து சர்ச்சைக் கருத்து கூறிய மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷா மன்னிப்பு கோரியுள்ளார். நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்து பிரதமர் மோடி ஒழித்துவிட்டதாக அமைச்சர் விஜய் ஷா கூறியதற்கு கடும் கண்டனம் எழுந்தது.

மேயராக தமிழர்

சென்னையை பூர்வீகமாக கொண்ட டாக்டர். மோனிகா தேவேந்திரன் இங்கிலாந்தின் ஏம்ஸ்பரி டவுன் மேயராக மீண்டும் தேர்வு.2021-ல் ஏமெஸ்பரி மேற்கு யூனிட்டரி கவுன்சிலராக தேர்வான இவர், 2022-2023 வரை அமெஸ்பரி டவுன் கவுன்சிலில் துணை மேயரானார்; 2023-ல் மேயராக தேர்வானார்.

யுபிஎஸ்சி தலைவர் நியமனம்:

யுபிஎஸ்சி தலைவராக, பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமனம்; 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும்வரை இப்பதவியில் நீடிப்பார்1985ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய்குமார், 2019 முதல் 2022 வரை பாதுகாப்புத்துறைச் செயலாளராக பணியாற்றினார்.

பாகிஸ்தான் தூதரக ஊழியர் வெளியேற ஆணை

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர், 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு.உளவு வேலை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் உத்தரவு பிறப்பிப்பு; தூதரக ஊழியருக்கு தகவலை வழங்கியதாக பஞ்சாபை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரிக்கிறது போலீஸ்

Read Entire Article