முதல்வர் ஆலோசனை

தமிழ்நாட்டில் வணிக LPG சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பல்வேறு துறை செயலாளர்கள், அரசின் முக்கிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர்கள் பணிநீக்கம்

AI ஆதிக்கம் காரணமாக, சுமார் 20% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய Meta நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
2025 டிசம்பர் நிலவரப்படி, Meta-வில் 79,000 ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி |முனையமான கார்க் தீவில் உள்ள ராணுவக் கட்டமைப்புகளை அமெரிக்க ராணுவம் முற்றிலுமாக அழித்துவிட்டதாக ட்ரம்ப் தெரிவிப்பு. மனிதாபிமான அடிப்படையில் அங்குள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தாக்கவில்லை என்றும், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்களை தொடர்ந்தால் அதையும் விட்டுவைக்க மாட்டேன் எனவும் எச்சரிக்கை.

தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பதில் தாமதம்?

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி நாளை (மார்ச் 15) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓரிரு நாட்கள் தாமதமாக வாய்ப்பு
மாநிலங்களவைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் மார்ச் 16ஆம் தேதிக்குப் பிறகே தேர்தல் தேதி அறிவிப்பு என தகவல்

இந்தியர்கள் உயிரிழப்பு:

ஓமன் நாட்டின் சோஹர் நகரில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு, 10 இந்தியர்கள் காயம், காயமடைந்தவர்களில் 5 பேர் ஏற்கனவே மருத்துவமனையில் |இருந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 5 பேர் சிகிச்சை பெற்று| வருகின்றனர் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவிப்ப

முடிவுக்கு வந்த காத்திருப்பு

வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை 18 ஆண்டு கால காத்திருப்பிற்கு பிறகு தொடங்கியது. கடற்கரை - பரங்கிமலை ரயில் சேவை இன்று அதிகாலை 5 மணி முதல் தொடங்கியது. முதல் ரயில் வேளச்சேரி வழியாக பரங்கிமலைக்கு காலை 6.05 மணிக்கு சென்றடையும் என தெரிவிப்பு.

காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளா?

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கும், தி.மு.க கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தே.மு.தி.க-விற்கும் அதிக தொகுதிகள் என கேள்விப்பட்டோம்; தே.மு.தி.க-விற்கு அதிக தொகுதிகள் ஒதுக்கிவிட்டு எங்களுக்கு தொகுதிகளை குறைப்பதில் எந்த நியாயமும் இல்லை. மதவாத சக்திகளை விரட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு எங்கள் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளும் முக்கியம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நிரிணை கடந்த கப்பல்

தடை செய்யப்பட்ட ஹோர்முஸ் நீரிணையை 54,000 டன் எரிவாயு உடன் கடந்து இந்தியா வருகிறது கப்பல் நேற்றிரவு(மார்ச்13) ஹோர்முஸ் நிரிணையை சிவலிக் என்ற இந்தியக் கப்பல் கடந்துள்ளது; கத்தாரில் இருந்து கடந்த 7ஆம் தேதி புறப்பட்ட கப்பல் ஈரானின் தடையால் சிக்கியிருந்து; சிவலிக் கப்பலில் வரும் 54,000 டன் எரிவாயு இந்தியாவின் ஒருநாள் LPG இறக்குமதிக்கு சமமானது.

பெட்ரோலியம் டீலர் சங்கம் மனு

பெட்ரோல், டீசல் தமிழகத்தில் அடுத்த 19 நாட்களுக்கு தேவையான அளவிற்கு இருப்பில் உள்ளது; இருப்பினும் வதந்தியை நம்பி தேவைக்கு அதிகமாக பெட்ரோல் வாங்கி செல்ல கூட்டம் கூடுகிறது. அளவுக்கு அதிகமாக கூடும் கூட்டத்தை ஊழியர்கள் மட்டுமே கட்டுப்படுத்த முடியவில்லை; காவல்துறை பாதுகாப்பு தேவை - தமிழக பொறுப்பு டி.ஜி.பி.யிடம் பெட்ரோலியம் டீலர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது