2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேட்டி.

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், சென்னை சென்ட்ரல் - திருத்தணி மார்க்கத்தில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இன்று மாலைக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் என ரயில்வே அதிகாரிகள் தகவல்.

பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

தமிழ்நாட்டில் ஜூலை 15 முதல் 20-ம் தேதி வரை 7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.9,155-க்கும், ஒரு சவரன் ரூ.73,240-க்கும் விற்பனை.

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி(87) உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார்.

சபரிமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவக்கிரக கோயில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.

நாட்டின் 74,000 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என இந்திய ரயிலவே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாகனங்களில் முன்பக்க கண்ணாடியில் ‘பாஸ்டேக்‘ ஸ்டிக்கரை ஒட்டாமல் கைவசம் வைத்திருந்தால் கருப்பு பட்டியல் அல்லது ஹாட் லிஸ்டில் சேர்க்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு.

லண்டனில் சவுத்செண்ட் விமான நிலையத்தில இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் வெடித்துச் சிதறியது.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இன்று பூமிக்கு புறப்படுகிறார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா.

விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர் இதுவரை 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை. விம்பிள்டன் பட்டம் வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.