Top 10 News Headlines: 10 மாவட்டங்களுக்கு வெயில் எச்சரிக்கை, பாலை காய்ச்சாமல் குடித்த பெண் உயிரிழப்பு - டாப் 10 செய்திகள்

8 months ago 6
ARTICLE AD

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

“எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழித் திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம்!” மொழி அடிப்படையில் மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாக உ.பி. முதலமைச்சர் யோகி பேசியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

சாதித்த தமிழ்நாடு அரசு!

மின்னணுத் துறை ஏற்றுமதியில் நடப்பு நிதியாண்டில் 12 பில்லியன் டாலரை தாண்டி சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு. இதனை குறிப்பிட்டு ”தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் வஞ்சகக் கூட்டம் கதறக் கதற தமிழ்நாடு முன்னேறிக் கொண்டே இருக்கும்” என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டிலேயே 12 பில்லியன் டாலரை தமிழ்நாடு எட்டும் என கடந்தாண்டு ஜூலை மாதத்திலேயே அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் அண்ணாமலை

இன்று காலை 6.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல். அமித்ஷா வை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், இதுவரை நேரம் ஒதுக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு மூத்த தலைவர் மூலமாக அமித்ஷா வை சந்திக்க அண்ணாமலை திட்டம்.  இபிஎஸ் - அமித்ஷா சந்தித்த நிலையில் அண்ணாமலையின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வெயில் எச்சரிக்கை

வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, |திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர்| ஆகிய 10 மாவட்டங்களில் இன்று முதல் 31ம் தேதி வரை வெப்பநிலை 39 டிகிரி C முதல் 41 டிகிரி C வரை (107°F மேலாக) பதிவாகக்கூடும் என வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தம்

புதிய ஒப்பந்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 6 மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 4,000க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தம்.

நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம்

பிஎம் ஸ்ரீ' திட்டத்தை ஏற்க மறுப்பதால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான கல்வி நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தியது நியாயமற்றது என நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம். மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்தல். தமிழ்நாடுக்கு ரூ.2,152 கோடி, மேற்குவங்கத்திற்கு ரூ.1,000 கோடி, கேரளாவிற்கு ரூ.859 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாலை காய்ச்சாமல் குடித்த பெண் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசம்: நொய்டாவில் பசுவின் பாலை காய்ச்சாமல் குடித்த பெண் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு. தெரு நாய் ஒன்று கடித்ததால் ஏற்கனவே அந்தப் பசுவுக்கு ரேபிஸ் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட  பசுவின் பாலை கொதிக்க வைக்காமல் அப்படியே குடித்ததால் அப்பெண்ணுக்கும் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இறக்குமதி கார்களுக்கு 25% வரி - ட்ரம்ப்

வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25% வரி விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவிப்பு. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்களுக்கு வரி கிடையாது எனவும் விளக்கம்.

கோலி சோடாவுக்கு வெளிநாடுகளில் அதிகரிக்கும் மவுசு!

இந்தியாவின் பாரம்பரிய பானமான கோலி சோடாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் மவுசு அதிகரித்துள்ளது -மத்திய வர்த்தக அமைச்சகம்| பிரபலமான கோலி சோடா தற்போது வெளிநாடுகளில் 'பாப் கோலி சோடா' என்ற பெயரில் ரீபிராண்ட் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய ஐபிஎல் போட்டி

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணியை, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி எதிர்கொள்கிறது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. ஐதராபாத் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், லக்னோ தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article