இனி யுபிஐ மூலம் ஒரு முறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களைச் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று கூறி உள்ளதாவது:

2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை தேர்வர்களின் நலன் கருதியும் தெரிவுப் பணிகளை விரைவுபடுத்தவும் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் 7557 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்குத் தெரிவு (selection) செய்யப்பட்டுள்ளனர். மேலும் நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 441 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப் பணியிடங்கள் (shortfall vacancies) நிரப்பப்பட்டுள்ளன.

கட்டணங்களை UPI மூலம் செலுத்தலாம்

ஒருமுறை பதிவிற்கான கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர்கள் செலுத்துவதை எளிமைப்படுத்தும் விதமாக, UPI மூலம் செலுத்தும் வசதியை தேர்வாணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.