<p>குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் முதன்மைத் தேர்வு தேதி ஆகியவை எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல 2025 பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p>அதேபோல ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகளுக்கான (நேர்முகத் தேர்வு பதவிகள்) முடிவுகள் உத்தேசமாக நவம்பர் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p>