TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

1 year ago 8
ARTICLE AD

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு இன்று (ஜூலை 27) தொடங்கி உள்ள நிலையில், ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் முதுகலை படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு இன்று (ஜூலை 27) தொடங்கி உள்ளது. இதற்கு, ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஆக. 19ஆம் தேதி பொதுக் கலந்தாய்வு

தொடர்ந்து மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 10ஆம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. பின்னர் சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கலந்தாய்வில், மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, பாதுகாப்புப் படை வீரர்கள் ஆகியோருக்கு ஆக. 14ஆம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது. பொதுக் கலந்தாய்வு ஆக. 19ஆம் தேதி தொடங்குகிறது. 23ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடக்கிறது.

முதலாம் ஆண்டு வகுப்பு எப்போது?

கலந்தாய்வு முடிந்த பிறகு, முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி வகுப்புகள் தொடங்க உள்ளன.

கடந்த மாதம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு நடந்து, கலந்தாய்வும் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்மாணவர்கள், https://static.tneaonline.org/docs/arts/PG-TNGASA2024-Instruction-Tamil.pdf?t=1722063145967 என்ற இணைப்பை க்ளிக் செய்து, முதுகலைப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து அறியலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.youtube.com/watch?v=f1Pm0zN4Vq8 என்ற வீடியோ இணைப்பில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் கல்லூரிகளின் முழு பட்டியலைப் பார்க்க https://static.tneaonline.org/docs/arts/List_of_Government_Colleges_offering_PG24_Courses.pdf?t=1722063145967  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

https://static.tneaonline.org/docs/arts/TNGASA-PG-24-Booklet.pdf?t=1722063145967 என்ற இணைப்பில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான முழு வழிகாட்டி கையேடு குறிப்பிடப்பட்டுள்ளது.

இ மெயில் முகவரி: [email protected]

தொலைபேசி எண்கள்: 044 - 24343106, 044 - 24342911

Read Entire Article