TN Weather: வெயில் கொளுத்தப்போகுது! 2 நாள் கவனமா இருங்க: அதிக வெயில் எங்கே தெரியுமா?

8 months ago 6
ARTICLE AD

தமிழ்நாட்டில் படிப்படியாக வெப்பநிலை உயர்ந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 40 ° செல்சியஸ் ( 104 டிகிரி ஃபாரன்ஹீட் ) பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்த நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை :

மழை நிலவரம்:

தென் தமிழகத்தில் (திருநெல்வேலி & தென்காசி மாவட்டங்களில்) ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

அடையாமடை (கன்னியாகுமரி) 1 செ.மீ.

வெப்பநிலை நிலவரம்:

அதிகபட்ச வெப்பநிலை:- வேலூர் : 40.0° செல்சியஸ்

குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்): கரூர் பரமத்தி: 20.5 டிகிரி செல்சியஸ்

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கைhttps://t.co/467dVuULiL pic.twitter.com/0Zi2GdbrND
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) March 28, 2025

வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-40 டிகிரி செல்சியஸ், தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-37 டிகிரி செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-39 டிகிரி செல்சியஸ் மற்றும் தென் தமிழக கடலோரப்பகுதிகளில் 33-35 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க: தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை:

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று 28-03-2025: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

29-03-2025 மற்றும் 30-03-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

31-03-2025: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

01-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

02-04-2025 மற்றும் 03-04-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 28-03-2025 முதல் 30-03-2025 வரை; தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read Entire Article