தமிழ்நாடு, புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னனுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் இன்று (29.07.2024) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 10 செ.மீ. மழையும், ஊத்து பகுதியில் 8 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 7 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

30.07.2024:

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 3-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

31.07.2024 முதல் 04.08.2024 வரை

தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் புதுவைஅ மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 10 சென்டி மீட்டர் மழையும், ஊத்து பகுதியில் 8 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் வருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் வருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை - பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸை வட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை இயல்பை விட 56% அதிகமாக பதிவாகியுள்ளது. தென்மேற்குப் பருவமழை ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் இறுதிவரை நீடிக்கும். ஜூன் -1-ம் ஜூலை மாதம் 28ம் தேதி வரை தெற்மேன்று பருவமழை இயல்பை விட அதிகமாக மழை பதிவாயிருக்கிறது. 177.4 மி.மீ. பதிவாகியிருக்கிறது. இதுவே கடந்தாண்டு இந்த காலகட்டத்தில் 113.4 மிமீ பதியாவியிருந்தது. இந்த ஆண்டு 56% அதிகரித்திருக்கிறது.