தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மேலும் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வரும் 17 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே தேதியில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

[tw]

pic.twitter.com/dAxQ0ve5v5

— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 12, 2025

[/tw]

நவம்பர் 18இல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 18ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்தில், ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.