TN weather Today: தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக, மண்டல வானிலை மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது.

வானிலை மையம் எச்சரிக்கை:

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, திருப்பூர், திண்டுக்கல், மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேநேரம், நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை, தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்:

நாளை தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவை, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு தங்களது பணிகளை திட்டமிட வலியுறுத்தப்படுகிறது.