TN Secretariat: தமிழ்நாட்டிற்கு புதிய தலைமைச் செயலகம்.. அதிரடியாக அறிவித்த விஜய்.. எந்த இடம் தெரியுமா?

1 month ago 4
ARTICLE AD

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் தலைமைச் செயலகம் இடமாற்றம் செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலகம்

சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் சில அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். அதில், புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்பதும் இடம்பெற்றிருந்தது. அதன்படி, நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் சென்னையில் 20 இலட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும்.தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும். போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். மாநில அரசின் நிர்வாக தேவையை கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

400 ஆண்டுகள் பழமையான கட்டிடம்

தற்போது தலைமைச் செயலகம் செயல்படும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரலாற்றுச் சின்னமாக பாதுகாக்கப்படும். 400 ஆண்டுகள் பழமையான அந்த கட்டிடம் தமிழகத்தின் நிர்வாக அமையமா, ஆட்சி அதிகாரம் கொண்ட இடமாக செயல்பட்டு வந்தது. தற்போது தமிழ்நாடு அரசின் துறைகள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் செயல்பட்டு வருகிறது. வணிக செயல்பாடுகளுக்காக ஆங்கிய கிழக்கிந்திய கம்பெனியால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை 1640ம் ஆண்டு வாங்கப்பட்ட நிலையில் 1644ம் ஆண்டு கட்டடம் முழுமைப்பெற்றது.

அதன்பிறகு ஆங்கில அரசின் அதிகார இடமாக இருந்தது. சுதந்திரத்திற்குபின் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலமாக உள்ளது. 107 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இவ்வளாகத்தின் தமிழக அரசின் செயல்பாட்டின் கீழ் 4 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. மீதமுள்ளவை இந்திய பாதுகாப்புத்துறை, தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்த வளாகத்தை விரிவுப்படுத்த முடியவில்லை. இந்த வளாகம் 2.7 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. பின் அது பல்நோக்கு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரியாக மாற்றப்பட்டதால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போதைய கட்டமைப்புகள் மாற்றப்படாமல் உள்ளது. கூடுதல் கட்டமைப்புக்கு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. எனவே புதிய தலைமைச் செயலகம் கட்டுவது இன்றியமையாதது எனவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னைக்குள் புதிய தலைமைச் செயலகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில் கிண்டி அல்லது பட்டினப்பாக்கம் ஏரியாவில் அமைய அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Read Entire Article