TN Roundup: வாக்கு எண்ணிக்கை டென்ஷன்.. இன்று நீட் தேர்வு.. 10 மணி வரை நடந்தது என்ன?

1 month ago 7
ARTICLE AD

நாங்கள் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைப்போம். மே மாதம் 4ஆம் தேதிக்குப் பிறகு விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்கும். இதில் எனக்குப் பெரிய நம்பிக்கை இருக்கிறது என மதுரையில் மத்திய அமைச்சரும் பாஜகவுக்கான தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

நாடு முழுவதும் இன்று மதியம் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறவுள்ளது.

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் ஜூன் 2 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் உணவுப்பொருட்களின் விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளது. விடுதி கட்டணமும் அதிகரித்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

தேர்தல் முடிவு நாளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரே இரவில் மக்களின் மனநிலை மாறிவிடாது. நல்லாட்சி தொடர வேண்டும் என மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள். திமுக கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மதுரை மத்தி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுந்தர்.சி தேர்தலில் வென்றால் சினிமாவில் இருந்து விலகுவேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடும் வெயில் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். நீண்ட வரிசையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் விரைந்து தீர்வு காண கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றச்சாட்டின் தீவிரம், விசாரணை நிலையை கருத்தில் கொண்டு 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எப்படி கணக்கு போட்டுப்பார்த்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதேபோல விசிக போட்டியிடும் 8 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கோடைகால மின்சார தேவை எவ்வளவு என்பதை கணக்கிட்டு அதற்கு தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மின்சாரமும் தேவைக்கேற்ப கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என தமிழக மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

Read Entire Article