தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தங்களுக்கு மகிழ்ச்சி இல்லையென்றாலும் கூட்டணிக்காக தியாகம் செய்வதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.15,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை குறைவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் தம்பிதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார். பாமக சார்பில் அன்புமணியும், தேமுதிக சார்பில் சுதிஷூம் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை 2 வாரங்களில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நாங்குநேரியில் நடந்த இரட்டைக் கொலையில் உயிரிழந்த ஜான் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வந்த காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் தடத்தில் இன்று சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. மார்ச் 8ம் தேதி முதல் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டியலின மக்கள் வசிக்கும் இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 3 பைக்குகளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் கண்ணில் பட்டவர்களையெல்லாம் அரிவாளால் தாக்கிய அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

டெல்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு என்றைக்குமே Out Of Control தான் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி ரயில் நிலைய நுழைவு வாயிலில் இந்தியில் தமிழ் பெயர் சூட்டப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெயர் பலகை நீக்கப்பட்டது.'