தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாகக் கூடும் -இந்திய வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பனையூர் அலுவலகம் வந்துள்ளனர்.

புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பனையூர் அலுவலகம் வந்துள்ளார். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசானாவும் வருகை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.94,160க்கு விற்பனை

“ஆளுநர் திட்டமிட்டே விஷம பிரசாரம் செய்கிறார்” -திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சனம்

ஒசூரில் பசுமை விமான நிலையம் - ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது

கோவில்பட்டி அருகே தளவாய்புரத்தில் மதுக்கூடத்தில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் கொலையாளி கைது

கோவையில் கடந்த ஆகஸ்டில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு பிறகு வனப்பகுதியில் விடப்பட்ட 'ரோலக்ஸ்' என்ற காட்டு யானை உயிரிழந்தது

சென்னையில் சிலிண்டர் டெலிவரி செய்யும்போது நோட்டமிட்டு விலை உயர்ந்த யமஹா ஆர்-15 பைக்கை திருடிய இளைஞர் கூட்டாளியுடன் கைது

சிவகங்கையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தெய்வச் சிற்பங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிப்பு..