தமிழ்நாட்டில் ஜனவரி மாத்திலும் வடகிழக்கு பருவமழையானது, அவ்வப்போது சில மாவட்டங்களில் கனமழை பெய்துவந்த நிலையில், இன்று தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்தான தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் குதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை https://t.co/467dVuULiL pic.twitter.com/YB1z2uIvVl

— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) January 27, 2025

22-01-2025 மற்றும் 20-01-2025:

இன்று மற்றும் நாளையை வானிலையை பொறுத்தவரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

29.01-2025:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

30-01-2025:

தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

31-01-2025:

தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரி இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

01-02-2025:

தென் தமிழகத்தில் அநேக இடங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

02-02-2025:

தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (27-01-20251 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக வேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை -செல்சியஸ் ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியம், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியம் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: Padma Awards 2025: கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ; கார் ரேசர் அஜித்துக்கு பூஷன்.! 139 பேர் பட்டியல்