தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

நாளை (20-01-26) எங்கெல்லாம் மின் தடை:

சென்னை மாவட்டம்:

ஆவடி மூர்த்தி நகர், வள்ளலார் நகர், முல்லை நகர், தென்றல் நகர், பத்மாவதி நகர், சரஸ்வதி நகர், மாசிலாமணி நகர், ஈட்டி அம்மன் நகர், ஜாக் நகர், சிடிஎச் சாலை, பாலாஜி நகர், காளிகாம்பாள் நகர், ஸ்ரீ நகர் காலனி, தாமரை தெரு, பிருந்தாவன் நகர், சோழம்பேடு மெயின் ரோடு, அர்ஜூன் நகர், சக்தி நகர், ஸ்ரீனிவாசா நகர், சக்தி நகர் அம்மன் தெரு, அண்ணா தெரு, டிவிகே தெரு, ரெட்ஹில்ஸ் மெயின் ரோடு, விநாயகபுரம் 10வது மெயின் ரோடு, லெனின் நகர், மாசிலாமணி தெரு, ஏரிக்கரை சாலை, விநாயகர் நகர்.

மாத்தூர் 1வது மெயின் ரோடு எம்எம்டிஏ, இடைமா நகர், காமராஜர் சாலை, எம்சிஜி அவென்யூ, சிகேஎம் நகர், திருவள்ளுவர் நகர், வெங்கட் நகர், ஆவின் குவார்ட்டர்ஸ், பால் காலனி, பக்தவச்சலம் நகர், மெட்ரோ வாட்டர் பம்ப் ஹவுஸ், சிஎம்ஆர்எல் மெட்ரோ ரயில், மண்ணாடி தெரு, ஜீவோதயா மற்றும் அதை சுற்றியுள்ள இடங்கள்

கோவை மாவட்டம்

தேவணாம்பாளையம், குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதூர், சேரிபாளையம், ஆண்டிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், செஞ்சேரிப்புத்தூர், எஸ்.பி.வடுகபாளையம், சின்னப்புத்தூர், ஜல்லிபட்டி, கம்மாளபட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், வலசுப்பாளையம், நந்திபுரம், சேத்தம்பள்ளி, மண்ணாம்பாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், எஸ்.அய்யம்பாளையம், அப்பநாயக்கன்பாளையம், மில்கோவில்பாளையம், காளியண்ணன்புதூர், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், கக்கடவு, சோழனூர், செங்குட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், வடக்கிபாளையம், ஆதியூர், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி

திருப்பூர் மாவட்டம்

கோமங்கலபுதூர், காடிமேடு, கொளநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வாத்தநல்லூர், கொல்லர்பட்டி, கே சுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி

ஈரோடு மாவட்டம்

வில்லரசம்பட்டி பகுதியான பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோட்டம், மல்லி நகர்

கரூர் மாவட்டம்

பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி

திருச்சி மாவட்டம்:

மன்னர்புரம்

மன்னார்புரம், சுப்ரமணியபுரம், க்ராஃபோர்ட், கோட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜமலை, கல்லுக்குழி, ரஞ்சிதாபுரம், உலகநாதபுரம், என்எம்கே கிளை, சர்க்யூட் ஹவுஸ் க்ளினி, கே.ஜி.சி.

ஸ்ரீரங்கம்

மேலூர், நெடுந்தெரு, சாலை , நெல்சன் சாலை, புலிமண்டபம், ரெங்கா நகர், ராகவேந்திரபுரம், மங்கம்மா நகர், ராயர் தோப்பு, கீதா நகர், தாத்தாச்சாரியார் கார்டன்.

முசிறி

முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, கட்டப்பட்டி

எடமலைப்பட்டிபுதூர்

அன்பு என்ஜிஆர், இ.புதூர், கிருஷ்ணாபுரம் 1&2 கிராஸ், ராமச்சந்திரா என்ஜிஆர், குட்டி மலை, அரசு கிளை, ராஜீவ் காந்தி என்ஜிஆர், கேஆர்எஸ் என்ஜிஆர், ஆர்எம்எஸ் கிளை, அருணாச்சலம் கிளை, சொக்கலிங்கபுரம்

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சை அருளானந்தநகர், பிலோமினாநகர், காத்தூண்நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்புநகர், திருச்சி ரோடு, வ.உ.சி.நகர், பூக்காரத்தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம், கணபதிநகர், ராஜப்பாநகர், மகேஸ்வரிநகர், திருப்பதிநகர், செல்வம் நகர், அண்ணாமலைநகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம்நகர், பாண்டியன்நகர், கலெக்டர் பங்களாரோடு, டேனியல் தாமஸ்நகர், ராஜராஜேஸ்வரிநகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனிதெற்கு, புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, எலிசாநகர், முல்லை, மருதம், நெய்தல், நட்சத்திராநகர், ஆர்.ஆர்.நகர், சேரன்நகர், காவேரிநகர், நிர்மலாநகர், வி.பி.கார்டன், யாகப்பாநகர், அருளானந்தஅம்மாள்நகர், குழந்தை இயேசு கோவில், பிஷப் காம்பளக்ஸ்

தருமபுரி மாவட்டம்

பாலக்கோடு, சர்க்கரை ஆலை, கடமடை, வெள்ளிச்சந்தை, மாரண்டஹள்ளி, கனவேனஹள்ளி, மலப்புரம், புறத்தூர், பஞ்சப்பள்ளி, பெல்லூரானஹள்ளி, சோமனஹள்ளி, ஜகசமுத்திரம், மல்லுப்பட்டி, மாகேந்திரமங்கலம், குமாரசாமிப்பேட்டை, பெடமனேரி, மாந்தோப்பு, வி.ஜெட்டியள்ளி, இந்தூர், சோம்பட்டி, வீவ்ஸ் காலனி, நேதாஜி பை பாஸ் ரோடு, அப்பாவு நகர், ஏ.ஆர்.குவாட்டர்ஸ், ரயில்வே நிலையம், பங்குநாதம்

கிருஷ்ணகிரி மாவட்டம்

ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டாம்பட்டி, பெட்டாம்பட்டி, வேப்பளம்பட்டி, லட்சுமிபுரம், பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.