தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

நாளை(19-12-25) எங்கெல்லாம் மின் தடை:

சென்னை

அலமாதி: கீழ்கொண்டையுர், அரக்கம்பாக்கம், கர்லபாக்கம், தாமரைபாக்கம், கதவூர், வேலச்சேரி, பாண்டேஸ்வரம், கரனை, புதுகுப்பம், வாணியன்சத்திரம், ஆயிலச்சேரி, குருவாயில், பூச்சியத்துபேடு, கோடுவல்லி, ரெட்ஹில்ஸ் சாலை, பால்பண்ணை, வேல் டெக் சாலை, கொள்ளுமேடு சாலை.

செங்குன்றம்: சோத்துபாக்கம் சாலை, பாலாஜி கார்டன்,
புள்ளிலைன், பைபாஸ், வடகரை, விஷ்ணு நகர், கிராண்ட்லைன், கண்ணம்பாளையம், செம்பரம்பாக்கம், தீயப்பாக்கம், பாடியநல்லூர், எம்.ஜி.ஆர். நகர்,

கரூர்:

வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.

கோவை

புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ - இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம்
மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராணாபுரம்

மேட்டூர்

அரூர்பட்டி, பூசாரியூர், புளியம்பட்டி, செலவாடை, எட்டிக்குட்டைமேடு, ஆண்டிபாளையம், ஈகபுரம், கன்னந்தேரி, கச்சுப்பள்ளி, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், புதுப்பாளையம், கோரணம்பட்டி, கோணசமுத்திரம், எடங்கனசாலை, ஆர்.புதூர், கொல்லப்பட்டி, தைலம்பட்டி, தெப்பக்குட்டை, ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், சௌரியூர், செலவாடை.பன்னிகனூர், கட்டிநாயக்கன்பட்டி, காட்டம்பட்டி

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.