TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!

1 year ago 7
ARTICLE AD

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு எம்.பி.,க்கள் ஜூன் 25 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் 3வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றனர். இதனிடையே ஜூன் 24 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் தற்காலிக சபாநாயகர் புதிய எம்.பி.,களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். தற்காலிக சபாநாயகராக பாஜகவின் மூத்த தலைவருமான, ஒடிசா மாநில எம்.பி.,யுமான பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தலைவர் @thirumaofficial , நான் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்.பிக்கள் ஜூன் 25 பகல் 1 மணி முதல் 3 மணிக்குள் பதவி ஏற்கிறோம். முதல் நாளான ஜூன் 24 இல் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 15 பேர் உட்பட 280 பேர் பதவி ஏற்கின்றனர். #Swearing_in #Loksabha #Tamil pic.twitter.com/A3FH5xPCJJ
— Dr D.Ravikumar (@WriterRavikumar) June 23, 2024

இந்நிலையில் தமிழக எம்.பி.,க்கள் ஜூன் 25 ஆம் தேதி பதவியேற்கிறார்கள். இதுதொடர்பாக விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி.,யான ரவிகுமார் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”விசிக தலைவர் திருமாவளவன், நான் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்.பிக்கள் ஜூன் 25 பகல் 1 மணி முதல் 3 மணிக்குள் பதவி ஏற்கிறோம். முதல் நாளான ஜூன் 24 இல் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 15 பேர் உட்பட 280 பேர் பதவி ஏற்கின்றனர்” என தெரிவித்துள்ளார். அன்று மதியம் 1 மணி முதல் 3 மணிக்குள் பதவிப்பிரமாணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article