TN Government employees: அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்.? வெளியாகிறது புதிய அறிவிப்புகள்- தேதி குறித்த அரசு

2 months ago 9
ARTICLE AD

அரசு ஊழியர்கள் தொடர் கோரிக்கை

அரசு ஊழியர்கள் தான் அரசு அறிவிக்கும் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் முக்கிய பாலமாக உள்ளனர். அந்த வகையில் அரசு ஊழியர்களுக்காக பல்வேறு சலுகைகளையும் புதிய திட்டங்களையும் அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கடந்த 23ஆண்டு கால முக்கிய கோரிக்கையாக இருப்பது நிறுத்தப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பதாகும். இதற்காக பல போராட்டங்களையும் அரசு ஊழியர்கள் நடத்தி வந்தனர். இதனையடுத்து ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசின் சார்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு

இந்த குழு பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில், கடந்த ஜனவரி 3-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவித்தார். இதன் மூலம் கடைசி ஊதியத்தில் 50% உத்தரவாத ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அரசு ஊழியர்கள் வரவேற்றுள்ளனர். இதனையடுத்து ஓய்வு ஊதிய திட்டத்தை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டும் வகையில் ஜாக்டோ-ஜியோ நன்றி தெரிவிக்கும் விழா நடத்தவுள்ளது. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் (8ம் தேதி) நாளை மறுநாள்  நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு தொடர்பாக அழைப்பிதழை முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அளித்தனர்.

பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகுமா புதிய அறிவிப்பு

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்  இரா.தாஸ் மற்றும் கு.தியாகராஜன் கூறுகையில்,கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதே நேரம் சிலர் இந்த ஓய்வு ஊதிய திட்டம் குறித்து விமர்சித்து வருகிறார்கள். இருந்த போதும்  பலர் இதை பாராட்டுகின்றனர் என தெரிவித்தார். தமிழ்நாடு தான் ஓய்வு ஊதிய திட்டத்துக்கு முன்னோடியாக இருக்கும் எனவும் தெரிவித்தனர். இந்த நிலையில் முதலமைச்சருக்கு நடைபெறும் நன்றி தெரிவிக்கும் விழாவின் போது முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு புதிய அறிவிப்புகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவிக்க இருப்பதாக தலைமைசெயலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

Read Entire Article