TN Election: முதல்வருக்காக ஓகே சொன்ன சிபிஎம்! முடிந்த தொகுதி பங்கீடு.. 5 தொகுதிகள் ஒதுக்கீடு

3 weeks ago 3
ARTICLE AD

சட்டமன்ற தேர்தலில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்குவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்

தொகுதி பங்கீடு:

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் முக்கிய நிகழ்வாக, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

எத்தனை தொகுதிகள்?

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், வரவிருக்கும் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்குவது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கோடும், தமிழகத்தின் வளர்ச்சியைத் தொடரச் செய்யும் இலக்கோடும் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இரு தலைவர்களும் கூட்டாகத் தெரிவித்தனர்.

எந்த தொகுதிகள்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட உள்ள குறிப்பிட்ட ஐந்து தொகுதிகள் எவை என்பது குறித்த விவரங்கள், அடுத்தகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கூட்டணிக் கட்சிகளின் வருகை மற்றும் தொகுதிப் பகிர்வில் நிலவிய சவால்களுக்கு இடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்த 5 இடங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டதாக தலைவர் பெ.சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Read Entire Article