TN Election Results 2026: தேர்தல் ரிசல்ட்.. என் போராட்டத்திற்கு இன்று ஒரு பதில் கிடைக்கும்.. தமிழிசை உறுதி!

1 month ago 5
ARTICLE AD

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நான் போட்டி போட்டது பதவிக்கு ஆசைப்பட்டு அல்ல என மயிலாப்பூர் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.10% வாக்குகள் பதிவானது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டியானது நிலவுகிறது. இதனால் எந்த கட்சி ஜெயிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழ்நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கையானது 62 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் சென்னையில் உள்ள மயிலாப்பூர் தொகுதியும் ஒன்று. அங்கு வேட்பாளராக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார்.

தொகுதி முழுக்க சூறாவளியாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழிசைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இதுவரை போட்டியிட்ட தேர்தல்களில் ஒரு வெற்றிக்கூட பெறாத தமிழிசை இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு உள்ளார்.

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கைக்காக கிளம்பி கொண்டிருக்கிறேன்.... அரசியலில் எனது பல ஆண்டுகால போராட்டத்திற்கு இன்று ஒரு பதில் கிடைக்கும் என்று எண்ணுகிறேன்... ஆளுநராக இருந்து இதற்கு ஏன் போட்டி போடுகிறார்கள்? பதவி ஆசை என்றனர் சிலர்.. பரிகசிப்பவர்களை பற்றி எனக்கு… pic.twitter.com/WvtPOPU5hA
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) May 3, 2026

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கும் நிலையில் தமிழிசை தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கைக்காக கிளம்பி கொண்டிருக்கிறேன்.... அரசியலில் எனது பல ஆண்டுகால போராட்டத்திற்கு இன்று ஒரு பதில் கிடைக்கும் என்று எண்ணுகிறேன்... ஆளுநராக இருந்து இதற்கு ஏன் போட்டி போடுகிறார்கள்?

பதவி ஆசை என்றனர் சிலர்.. பரிகசிப்பவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை என் கவலை எல்லாம் பரிதவிப்பவர்களை பற்றியே.. ஆம் நான் போட்டி போட்டது பதவிக்கு ஆசைப்பட்டு அல்ல பரிதவிப்பவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிக்கு  ஆசைப்பட்டு! சட்டமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக மட்டுமல்ல ஒவ்வொரு தமிழ் மகளின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே... தமிழ் மண்ணின் குரலாக மட்டுமல்ல ஒவ்வொரு தமிழ் பெண்ணின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்... இறைவன் வெற்றியைத் தந்து அருள் புரிவான் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Read Entire Article