TN Election Campaign: போடுங்கம்மா ஓட்டு! நாளை சாயங்காலத்துடன் ஓய்கிறது சட்டமன்ற தேர்தல் பரப்புரை!

1 hour ago 1
ARTICLE AD

இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல். அசாம், பாண்டிச்சேரி, கேரளாவிற்கு கடந்த 9ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் வரும் வியாழக்கிழமை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

நாளை மாலையுடன் பரப்புரை:

234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டமன்ற தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் ஓய்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கான ஓராண்டுக்கு முன்பு முதலே பல்வேறு கட்சியினரும் தங்களது தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு கட்சியினரும் மிகவும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபடத் தொடங்கினர். கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு முடிவு, வேட்பாளர் அறிவிப்பிற்கு பிறகு ஒவ்வொரு கட்சியினரும் மிகவும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைவர்கள் பரப்புரை:

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் ஆகிய முதலமைச்சர் வேட்பாளர்கள் மிகவும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை மாலையுடன் பரப்புரை முடிவடைய உள்ள நிலையில், விடுமுறை நாளான நேற்று அனைவரும் வீட்டில் இருப்பார்கள் என்பதால் அனைத்து கட்சியினரும் மிகவும் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்களும் ஆட்டோ ஓட்டி, துணி துவைத்து, டீ போட்டு, பஜ்ஜி போட்டு என விதம் விதமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் தீவிரம்:

பரப்புரை நாளை மாலை 6 மணிக்கு ஓய்வு அடைய உள்ள நிலையில், தேர்தலுக்கான வாக்குப்பதிவை மிகவும் தீவிரமாகவும், கவனமாகவும் நடத்துவதற்கு தேர்தல் ஆணையமும் உன்னிப்பாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

வாக்குப்பதிவு நடைபெற உள்ள மையங்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள மையங்கள் ஆகியவை, அதற்கான பாதுகாப்பு பணிகள் ஆகியவற்றிலும் தேர்தல் ஆணையம் மிகவும் தீவிரமான பணிகளில் ஈடுபட்டு  வருகிறது. பரப்புரைக்கு இன்றுடன் சேர்த்து 2 நாள் மட்டுமே இருப்பதால் ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும், வேட்பாளர்களும் சாலை வலம், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு என வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Read Entire Article