TN CM M.K.Stalin: காவிரி நீரை தரமறுத்த கர்நாடக அரசுக்கு கண்டனம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 year ago 7
ARTICLE AD
சென்னை: காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தினார். அப்போது பேசிய அவர், ‘’ காவிரி நடுவர் மன்றம், 5.2.2007அன்று அளித்த இறுதித்தீர்ப்பையும்; மாண்புமிகு உச்சநீதிமன்றம் 16.02.2018அன்று நடந்த இறுதித்தீர்ப்பின்படியும், காவிரி ஒழுங்காற்றுக்குழு தர வலியுறுத்திய நீரை தர மறுத்த கர்நாடக அரசிற்கு அனைத்து சட்டமன்றக்கட்சிக் கூட்டம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. காவிரி நீரை உடனடியாக விடுவிக்காத கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அனைத்து சட்டமன்றக் கட்சிக்கூட்டம் வலியுறுத்துகிறது’’ என்றார்.
Read Entire Article