தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து துறைகளிலும் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய சுமார் 436 திட்டங்களை முதலமைச்சர் விஜய் கொடுத்திருக்கிறார் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று தமிழக வெற்றிக் கழகம் அரியணை ஏறியுள்ளது. விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் தவெக அரசு பொறுப்பேற்று ஒரு மாதமாகவுள்ள நிலையில் ஏகப்பட்ட பிரச்னைகள் நிகழ்ந்து விஜய்க்கு சவாலாக மாறியுள்ளது. இந்த நிலையில் விஜய் தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

436 திட்டங்களை கொடுத்த முதலமைச்சர்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், “இன்றைய தினம் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளுக்கும் வரும் காலங்களில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து உத்தரவிட்டுள்ளார். சுமார் 436 திட்டங்களை முதலமைச்சர் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு துறையும் என்னென்ன இலக்குடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அந்தந்த துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விரிவான அறிக்கையை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

<iframe title="Mayor Priya vs TVK MLA: "ஓவரா ஆடாதீங்க பிரியா.. Protocol எங்களுக்கும் தெரியும்"தவெக எம்.எல்.ஏ அதிரடி" src="https://www.youtube.com/embed/p2MRnch1LAI" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

இளைஞர்கள் மேம்பாடு, மகளிர் முன்னேற்றம், விவசாயம் மற்றும் மீனவர்களின் வளர்ச்சி, போதையில்லா தமிழகம், லஞ்சம் இல்லாத ஆட்சி என அனைத்து துறைகளுக்கான திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் தேர்தல் வாக்குறுதியிலும் இடம்பெற்றதாகும். அனைத்துத்துறை அமைச்சர்களும் இந்த திட்டங்களை முழு வடிவம் பெற்றவுடன் முதலமைச்சர் விஜயின் ஒப்புதல் பெற்று நிறைவேற்றுவார்கள்.

போதையில்லா தமிழகம் தான் முக்கியம்

இதில் மிக முக்கியமானது போதையில்லா தமிழகம் தான். தமிழ்நாட்டில் 717 கடைகள் மூடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் போதைப்பொருட்கள் புழக்கம் எந்தளவு இருந்தது என்பது நமக்கு தெரியும். பள்ளி மாணவர்களிடத்திலும் இந்த பழக்கம் ஏற்பட்டுள்ளது. போதைப்பொருட்களின் புழக்கத்தை ஒழிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். அனைத்தையும் ஒழிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். கண்டிப்பாக எல்லா துறைக்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு விரைந்து நிறைவேற்றப்படும்.

இந்த முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எதை நோக்கி பயணிக்க வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டு மக்களின் மேம்பாட்டுக்காக திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேகதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நாட்டிட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் முதலமைச்சர் விஜய் முடுக்கி விட்டுள்ளார். போதைப்பொருட்களை ஒழிக்க தினமும் சோதனை நடந்து வருகிறது" என சி.டி.ஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.