TN Assembly Election: காட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஓட்டுப்பெட்டிகள்! எலெக்ஷன் ரிசல்ட் என்னாச்சு?

1 month ago 5
ARTICLE AD

தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

ஆற்றோடு போன வாக்குகள்:

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு தனி வரலாறும், மறக்கவே முடியாத பல நினைவுகளும் உள்ளது. தமிழ்நாட்டின் மலைப்பிரதேச பகுதிகளில் கடும் சவால்களுக்கு மத்தியிலே தேர்தல் நடைபெற்று வருகிறது. அப்படி சவாலான சமயத்தில் நடந்த தேர்தலில் வாக்குப்பெட்டிகள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது தளி. மலைப்பிரதேசமான இந்த பகுதி இன்று தளி தொகுதியாக உள்ளது. இந்த தொகுதி 1971ம் ஆண்டு உத்தனப்பள்ளி தொகுதியாக இருந்தது. சுமார் அரைநூற்றாண்டுகளுக்கு முன்பு தொழில்நுட்ப வளர்ச்சி, கிராமப்புறங்களில் சாலை வசதிகள் என இன்றைய வசதிகள் இல்லாத நாட்கள் ஆகும்.

காட்டாற்று வெள்ளம்:

1971ம் ஆண்டு உத்தனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட  தொட்டமஞ்சி மலை கிராமத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அந்த காலத்தில் போதிய சாலை வசதிகள் இல்லாததால் கழுதைகள் மீது வாக்குப்பெட்டிகளை ஏற்றி மலைப்பாதையில் இருந்து சமவெளிக்கு கொண்டு வருவது வழக்கமாக இருந்தது.

அவ்வாறு தொட்டமஞ்சிமலை கிராமத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து வாக்குப்பெட்டிகளை கழுதைகள் மீதும், எஞ்சிய வாக்குப்பெட்டிகளை தேர்தல் அலுவலர்கள் தலையில் சுமந்தபடி வந்துள்ளனர். அப்போது, அஞ்செட்டி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஓடியுள்ளது.

வெற்றி பெற்றது யார்?

காட்டாற்று வெள்ளத்தில் தலையில் வாக்குப்பெட்டிகளுடன் சிக்கிய அதிகாரிகள் நிலைதடுமாறியுள்ளனர். வாக்குப்பெட்டிகளை ஒரு பக்கம் காட்டாற்று வெள்ளம் அடித்துச் செல்ல, மறுபக்கம் தேர்தல் அலுவலர்களை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றுள்ளது.

அலுவலர்களும், பாதுகாவலர்களும் எவ்வளவோ முயன்றும் வாக்குப்பெட்டிகளை அவர்களால் மீட்க இயலவில்லை. தேர்தல் அலுவலர்கள் உயிருடன் கரைக்குத் திரும்பியதே பெரிய விஷயமாக கருதப்பட்டது. தேர்தல் முடிவுகளில் உத்தனபள்ளி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்  கோதண்டராமையா 13 ஆயிரத்து 854 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் 13 ஆயிரத்து 384 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் 12 ஆயிரத்து 998 வாக்குகள் பெற்றார்.

வாக்குப்பெட்டி என்னவானது?

வெற்றி பெறற சுயேட்சை வேட்பாளருக்கும், திமுக வேட்பாளருக்கும் இடையே 470 வாக்குகள் மட்டுமே வேறுபாடு ஆகும். ஆனாலும், தொட்டமஞ்சி மலைக்கிராமத்தில் இதைவிட குறைவான வாக்குகளே பதிவாகியிருந்தது. இதனால், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிவுகள் முடிந்து சுமார் 15 நாட்களுக்கு பிறகு காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள் மேட்டூர் அணையில் மீட்கப்பட்டது. தமிழ்நாட்டு தேர்தல் வரலாற்றிலே சட்டசபைத் தேர்தலுக்கான ஓட்டுப்பெட்டிகள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது இந்த தொட்டமஞ்சி மலைக்கிராமத்திலே ஆகும்.

Read Entire Article