TN 2026-ல் 'சிறந்த திருநங்கை' விருது! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது ஒரு பொன்னான வாய்ப்பு!

3 months ago 9
ARTICLE AD

சிவகங்கை மாவட்டம் 2026- ஆம் ஆண்டிற்கான ” சிறந்த திருநங்கைக்கான விருது” பெறுவதற்கு, தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன- மாவட்ட  ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.

திருநங்கைகள் தினம்

திருநங்கைகள் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15 ஆம் தேதியன்று, திருநங்கைகள் நலனுக்கென சிறப்பாக சேவை புரிந்து அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில், 2026 - ஆம் ஆண்டிற்கான “சிறந்த திருநங்கைக்கான விருது” தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளது. அவ்வாறாக விருது பெறும் சாதனையாளருக்கு ரூ.1,00,000/- (ரூபாய்  ஒரு இலட்சம் மட்டும்)  பரிசுத் தொகைக்கான காசோலை மற்றும்  பாராட்டுச்  சான்றிதழ் வழங்கப்படும். அரசாங்கத்தின்  உதவி பெறாமால் தனது வாழ்க்கையை கட்டமைத்துக்கொண்ட திருநங்கைகள், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தனது வாழ்வாதார ஆதரவைப்  பெறவும், கண்ணியமான வாழக்கையை நடத்தடவும் உதவிபுரிந்த திருநங்கைகள் இவ்விருதினை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேலும், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது ஆகிய தகுதியினையும் பெற்றிருத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள தகுதிகளுடைய  விண்ணப்பதாரர்கள், தங்களது கருத்துருக்களை (விரிவான தன் விவர குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும அதற்குரிய  ஆவணங்கள்)  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 2 பிரதிகளில் புத்தக வடிவத்தில் (Booklet - 4)  தயாரித்து,

விண்ணப்பிப்பது எப்படி

பாஸ்போர்ட் அளவு  புகைப்படத்துடன் விண்ணப்பித்திடல் வேண்டும். விருது பெற தகுதியுள்ளவர் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்படுவர். எனவே, திருநங்கைகள் நலனுக்கென சிறப்பாக சேவை புரிந்த திருநங்கைகள்,  வருகின்ற 18.2.2026 ஆம் தேதிக்குள் தங்களது கருத்துருக்களை மாவட்ட சமூக நல அலுவலத்தில் நேரில் சமர்ப்பித்தோ அல்லது  https://award.tn.gov.in என்ற இணையதளம்  வாயிலாக பதிவேற்றம் (Upload) செய்திடல் வேண்டும்.  மேலும், உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.

Read Entire Article