தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.00 மணியளவில் வெளியானது

12 ஆம் வகுப்பு:

ஒவ்வொரு மாணவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டம் என்றால் அது 12 ஆம் வகுப்பு தான், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்லவதற்கு இது தான் கேட் பாஸ். அந்த வகையில் 2024-2025 கல்வி ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகி உள்ளது.

மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். மார்ச் 3ஆம் தேதி முதல் 25 வரை தேர்வு நடந்தது. இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.4ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது. எனினும், ஒருநாள் முன்கூட்டியே 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது.

சென்ற ஆண்டு தேர்ச்சி விகிதம்:

கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 7,60,606 பேர் எழுதிய நிலையில் மொத்தம் 7,19,196 மாணவ தேர்ச்சி பெற்றனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 2478 பள்ளிகள் 100% தேர்ச்சியை அடை . இவற்றில் 397 பள்ளிகள் அரசுப் பள்ளிகள் ஆகும். ஒட்டுமொத்த கடந்த் ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56% ஆகும்

முடிவுகள் இங்கே காணலாம்

அதன்படி மே 8 ஆம் தேதியான இன்று காலை 9.00 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in , www.tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் வழியாகத் தெரிந்து கொள்ள என கூறப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் வழக்கம்போல மாணவர்களை விட, மாணவிகளே இந்தாண்டும் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.