பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப். 9) தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் இந்தத் தேர்வில் கலந்துகொள்கின்றனர்.

எந்தெந்தப் பள்ளிகளில் செய்முறைத் தேர்வு?

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அசோக் நகர்

PCKG மேல்நிலைப் பள்ளி கோடம்பாக்கம்

GHSS வேளச்சேரி

GRT மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

லேடி வெலிங்டன் மாடல் உயர்நிலைப் பள்ளி

திருவல்லிக்கேணி அரசு மாடல் உயர்நிலைப் பள்ளி

அரசு ஹோபர்ட் முஸ்லிம் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ராயப்பேட்டை

அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா மெட்ரிக் பள்ளி, கோட்டூர்புரம்

மான்ட்ஃபோர்ட் மேல்நிலைப் பள்ளி, ஆலந்தூர்

ஆகிய பள்ளிகளில் செய்முறைத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு

இதைத் தொடர்ந்து நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில், நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவச் செல்வங்களைச் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்வுகள் எப்போது?

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் 2026, மார்ச் 2 முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. தேர்வுகள் காலை 10 மணி முதல் 01:15 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.