பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்களைக் குறிப்பிட்டு, முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுத்தேர்வு நாளில் தாய் உயிரிழந்த நிலையிலும், பிளஸ் 2 மாணவன் தேர்வு எழுதச் சென்ற நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்தது. இந்த செய்தியை முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

முதல்முறையாக, கணினி மூலம் தேர்வு

அதேபோல, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் முதன்முதலாக கணினி மூலம் பார்வை மாற்றுத் திறனாளி ஆனந்தன் பொதுத்தேர்வு எழுதினார். கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு சார்பில் கணினி பயிற்சி பெற்ற அவர், தமிழக பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதல்முறையாக, கணினி மூலம் தேர்வு எழுதினார்.

மேலும், தன் மாற்றுத்திறனாளி மகளை தேர்வறைக்குத் தூக்கிச் சென்று தாய் அமர வைத்த சம்பவமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த 3 சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ''கல்விதான் நம் உயிரினும் மேல்;

இதுதான் தமிழ்ச் சமூகம்! கல்விதான் நம் உயிரினும் மேலானது! பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!'' என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதான் தமிழ்ச் சமூகம்!
கல்விதான் நம் உயிரினும் மேலானது!

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! pic.twitter.com/GNQpr5zCoB

— M.K.Stalin (@mkstalin) March 4, 2025

11 ஆயிரம் பேர் ஆப்சென்ட்

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 3) தொடங்கி நடைபெற்றது. சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். நேற்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வு நடந்த நிலையில், 11 ஆயிரம் பேர் தேர்வை எழுதவில்லை.

எனினும் தமிழகம் முழுவதும் கல்வியை முக்கியமாகக் கருதிய மாணவர்கள், தேர்வெழுதிய நிகழ்வுகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.