TN 10th Result 2025: அட்றா சக்க... அசாத்திய சாதனை படைத்த அரியலூர் மாணவி - தமிழகத்தில் முதலிடம்

7 months ago 8
ARTICLE AD

TN SSLC Result 2025: தஞ்சாவூர்: அட்றா சக்க... அரியலூர் மாணவியின் அசாத்திய சாதனையாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 499 மதிப்பெண் எடுத்து மாநில அளவில முதலிடம் பிடித்துள்ளார். இதையடுத்து மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கோகிலாம்பாள் மேல்நிலைப்பள்ளில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய சோபியா என்ற மாணவி 499 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குழவடையான் கிராமத்தில் கோகிலாம்பாள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் படித்த சோபியா என்ற மாணவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்தது சாதனை படைத்துள்ளார். இதையடுத்து மாணவிக்கு ஆசிரிய, ஆசிரியைகள், பொதுமக்கள், சக மாணவிகள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மாணவி சோபியாவின் சாதனை மதிப்பெண் பட்டியல்

தமிழ் 99

ஆங்கிலம் 100

கணிதம் 100

அறிவியல் 100

சமூக அறிவியல் 100 இவ்வாறு மதிப்பெண் எடுத்து சாதித்துள்ளார்.

மாணவி சோபியாவின் தந்தை வெங்கடேஷ் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலூர் மாவட்டம் 96.38 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 8 வது இடம் பெற்றுள்ளது. மேலும் பிளஸ் 1 வகுப்பு தேர்வில் தமிழக அளவில் அரியலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அரியலூர் மாவட்டம் 97.76 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற புனித ஆண்ட்ரூஸ் பள்ளி மாணவி ஷிவானி 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பிடித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 96.46 சதவீதத் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது. இந்த மாவட்டத்தில் தேர்வெழுதிய 7908 பேரில் 7628பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 7வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 94.77 சதவீதத் தேர்ச்சி பெற்றிருந்தது. கடந்த ஆண்டு மாநிலத்தில் 8வது இடம் பெற்றிருந்தது. தற்போது ஒரு இடம் முன்னேறி 7ம் இடம் பிடித்துள்ளது. 141-பள்ளிகளில் 70ள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது.

Read Entire Article