10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வெளியான நிலையில் இந்த வருட தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளை மாணவர்கள் தாண்டிச்சென்றார்களா இல்லையா என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

10 ஆம் வகுப்பு முடிவுகள்: 8,71,239 மாணக்கர்கள்

2024-2025 கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8,71,239 மாணக்கர்கள் எழுதினர். இந்த தேர்வுகள் கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைப்பெற்றது.

வெளியான முடிவுகள்:

இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். மொத்தம் இந்த ஆண்டு 8 லட்சத்து 71 ஆயிரத்து 239 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் மாணவியர்களின் எண்ணிக்கை : 4,19,316, மாணவர்களின் எண்ணிக்கை : 4,36,120 ஆகும்.

தேர்ச்சி விவரங்கள்:

தேர்ச்சி பெற்றவர்கள் : 8,17,261 (93.80%)

மாணவியர் 4,17,183 (95.88%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் 4,00,078 (91.74%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களை விட 4.14 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 15,652.

கடந்த மார்ச் / ஏப்ரல் 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,94,264. தேர்ச்சி பெற்றோர் 8,18,743 தேர்ச்சி சதவிகிதம் 91.55%.

கடந்த மார்ச் / ஏப்ரல் 2024 பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 2.05% சதவிகிதம் கூடுதலாக உள்ளது.

மாணவிகள் ஆதிக்கம்:

வழக்கமாக 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பார்த்தால் மாணவர்களை விட மாணவிகளை அதிகளவு தேர்ச்சி பெறுவது வழக்கம். இந்த ஆண்டு மொத்தம் தேர்வெழுதிய மாணவியர்களின் எண்ணிக்கை 4,35,119 ஆகும். அதே போல மாணவர்களின் எண்ணிக்கை : 4,36,120. இதில் மாணவிகள் 4,17,183 ( 95.88 %) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 4,00,078 (91.74 %)தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 4.14 % மாணவியர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

டாப் 5 மாவட்டங்கள்:

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் அதிக தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்கள்

1.சிவகங்கை - 97.49%

2.விருதுநகர் - 95.57%

3.கன்னியாகுமரி - 95.47%

4.திருச்சி - 95.42%

5.தூத்துக்குடி - 95.40%

கூடுதல் விவரங்கள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,485. இவற்றில்

மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை : 7,555

உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை : 4,930.

100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 4,917.

100% தேர்ச்சி பெற்ற எண்ணிக்கை 1.867 என்று அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?

மாணவர்கள் dge.tn.gov.in, tnresults.nic.in, results.digilocker.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.

அதேபோல, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்றும் அறிந்துகொள்ளலலாம். மேலும் மாணவர்கள்‌ தங்களின் பள்ளிகளில்‌ சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில்‌ குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள்‌ குறுஞ்செய்தி மூலமாகவும் அனுப்பபட்டு உள்ளன்.