<p style="text-align: justify;">தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா தன்னுடைய பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளது அந்த கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்த பிறகும் அந்த கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நீடித்தது. அப்போது, யுவராஜா நேரடியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டிற்கே சென்று பேசியது சர்ச்சையானது.</p>
<p style="text-align: justify;">ஆனால், அப்போது அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறிய யுவராஜா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்தார். இந்நிலையில், பாஜக கூட்டணியில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட் வெற்றி பெற முடியவில்லை.</p>
<p style="text-align: justify;">இதனைத் தொடர்ந்து நீண்ட காலம் தான் வகித்து வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார் யுவராஜா. அவர் தொடர்ந்து தமிழ் மாநில கட்சியிலேயே நீடிப்பார் என்று சொல்லப்பட்டாலும், எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமாலும் நடக்கலாம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்</p>
<p style="text-align: justify;"> </p>