Tiruvannamalai: திருவண்ணாமலையாரை தரிசித்த யோகி பாபு மற்றும் ரவி மரியா - காரணம் இதுதானா?

1 year ago 7
ARTICLE AD
திருவண்ணாமலை(தமிழ்நாடு): திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரபல திரைப்பட நடிகர்கள் யோகிபாபு மற்றும் ரவிமரியா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகிபாபு புதியதாக "கான்ஸ்டபிள் நந்தன் " என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில் படத்தின் பூஜைக்காக அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பட பூஜை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள சம்மந்த விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் யோகிபாபு மற்றும் ரவிமரியா ஆகியோருக்கு மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Read Entire Article