<p>திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.</p>
<p>சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கத் தடை இல்லை என்றும் சிபிஐ, காவல் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆகியவை இணைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இணைந்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்றும் அதன் விசாரணையை சிபிஐ இயக்குநர் கண்காணிப்பார் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p>