தக் லைஃப்

நாயகன் படத்தைத் தொடர்ந்து 34 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் கமல் கூட்டணியில் உருவாகும் படம் தக் லைஃப். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. கமல் , சிலம்பரசன் , அசோக் செல்வன் , த்ரிஷா , ஜோஜூ ஜார்ஜ் , ஐஸ்வர்யா லக்‌ஷ்மி , அபிராமி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கிறார். வரும் ஜூன் மாதம் இப்பம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு

தக் லைஃப் படத்தில் கமலின் மகனாக முன்னதாக துல்கர் சல்மான் நடிக்க இருந்தார். அவர் இப்படத்தில் இருந்து விலகியதைத் தொடர்ந்து சிம்பு இப்படத்திற்குள் வந்தார். ராஜ்கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு 48 படம் தாயாராக இருந்தது. தக் லைஃப் படத்தில் இணைந்த பிறகு எஸ்.டி.ஆர் 48 படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில காலம் ஆகும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு மற்றொரு படத்தில் நடிக்கிறார்.

From The Sets Of #ThugLife 💥 #SilambarasanTR looks absolutely stunning and stylish in his latest avatar👌🏻🔥🔥 pic.twitter.com/g0G3HXMKdN

— Arun Tamil Raj (@ArunTamilRaj) January 20, 2025

தற்போது தக் லைஃப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் சிம்புவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.