தக் லைஃப்

1987 ஆம் ஆண்டு மணிரத்னம் கமல் கூட்டணியில் நாயகன் திரைப்படம் வெளியானது. சுமார் 34 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் தான் தக் கைஃப் கமலின் 234 ஆம் படமாக உருவாகும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் முன்னதாக ஜெயம் ரவி , துல்கர் சல்மான் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பின் இருவரும் படத்தில் இருந்து விலகி சிலம்பரசன் மற்றும் அசோக் செல்வன் படப்பிடிப்பில் இணைந்தார்கள். இவர்கள் தவிர்த்து த்ரிஷா , அபிராமி , ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். டெல்லி , சென்னை , புதுச்சேரி , சைபீரா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

கமல் பிறந்தநாளுக்கு வெளியாகும் தக் லைஃப் படத்தின் டிரைலர்

இந்த ஆண்டு டிசம்பருக்குள்ளாக படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் நடிகர்கள் மாற்றம் செய்யப்பட்டதால் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் படம் வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. தக் லைஃப் படத்தின் அப்டேட் வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக படதயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இது படத்தின் டிரைலராக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமிருக்கின்றன.

Get Ready to Celebrate @ikamalhaasan Sir's Birthday, a Festive Celebration awaits on 7th Nov. #KHBirthdayCelebrations

Watch out for the Thugs on Nov 7th at 11 am.
#KamalHaasan #SilambarasanTR #Thuglife@ikamalhaasan #ManiRatnam @SilambarasanTR_ @arrahman #Mahendran… pic.twitter.com/eFb0S6JM3N

— Raaj Kamal Films International (@RKFI) November 5, 2024

தமிழ் சினிமாவின் இருபெரும் ஜாம்பவான்கள் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார்கள். சென்ற முறை நாயகன் என்கிற காலத்திற்கும் அழியாத ஒரு படத்தை கொடுத்த இந்த கூட்டணி இந்த முறை எந்த மாதிரியான ஒரு கதையோடு வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மனதிலும் இருக்கிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்பட கமல் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்த நிலையில் தக் லைஃப் படத்தில் கமல் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள்