மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் இன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களின் ரசனையை வென்றதா சோதித்ததா என்பதை இதில் காணலாம்.

மணி சார் ஏமாத்திட்டாரு

நாயகன் படத்திற்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து மணிரத்னம், கமல் கூட்டணியில் தக் லைஃப் படம் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, நாசர், அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். தமிழ்நாட்டை தாண்டி வெளிமாநிலங்களில் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் சுமாராக இருப்பதாகவே கருத்து தெரிவித்துள்ளனர். ரொம்ப எதிர்பார்த்தோம் மணி சார் ஏமாத்திட்டாரு. ஓகே ஒருமுறை பார்க்கலாம். இதற்குத்தான் 38 ஆண்டுகள் கழித்து இணைந்தார்களா என்ற கேள்வியும் எழுகிறது என கேரள ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரொமான்ஸ்னா கமல் தான்

தக் லைஃப் படத்தில் கமலின் நடிப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மக்கள், கமல் சார்கிட்ட ரொமான்ஸ் பத்தி சொல்லவா வேண்டும். ரொமான்ஸ்னா கமல் தான் என சிரித்தபடியே கூறினர். படம் பார்த்தால் புரியும் ரொமான்ஸ் பத்தி நீங்களே தெரிந்துகொள்வீர்கள். மேலும், கமல், சிம்பு, த்ரிஷா ஆகியோரின் நடிப்பு நல்லா இருக்கு. கதைதான் சுமாராக இருக்கிறது. படம் சிறப்பாக உள்ளது. இண்டர்வல் திருப்பம் சிறப்பாக உள்ளது. முதல் பாதி மெதுவாக சென்றாலும் இன்டர்வலுக்கு பின் படம் வேகம் எடுக்கிறது. கிளைமேக்ஸ் சிறப்பாக உள்ளது என ஆந்திர ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை எப்படி இருக்கு?

தக் லைஃப் படத்தில் மிகப்பெரிய பிளஸ் ஆக இருப்பது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை தான். அவரு படம் போற ஸ்பீடுக்கு ஏத்தமாதிரி மனுசன் செஞ்சிட்டாரு. தக் லைஃப் படத்தின் பலமாக ஏ.ஆர்.ரஹ்மான் இருந்துள்ளார். பின்னணி இசையில் மிரட்டிவிட்டதாகவும் தெரிவித்தனர். இருப்பினும் காட்சிகள் யூகிக்க கூடிய அளவிற்கு உள்ளது. பக்கா மாஸ் என்டர்டெயினர் படமாக தக் லைஃப் இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும், கமல் சார் வச்சு செஞ்சிட்டாரு. இதற்கு மேல் முடியாது. ஆக்சன் காட்சிகள் தரமாக இருந்ததாகவும் கேரள ரசிகர்கள் தெரிவித்தனர்.

வழக்கமான கதை

படத்தில் புதிதாக எதுவும் சொல்லவில்லை. மணிரத்னம் சார் இயக்கத்தில் இருப்பதால் பார்க்கும்படி இருக்கிறது. இரண்டாம் பாதி முதல் பாதியை விட வேகமாக செல்கிறது. கமலும், சிம்புவும் சண்டை போடும் காட்சிகளை பார்த்தாலே இதுதான் படம் என்று தெரியவரும். கண்டிப்பா பிளாக்பஸ்டர் படம் என கேரள மாநில ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். கமல் பலபேரை வச்சு செஞ்சுட்டாரு. சும்மா சொல்லக்கூடாது இந்த வயதில் தரமான ஆக்சனை தர முயற்சித்திருப்பதாகவும் வியந்து பாராட்டியுள்ளனர்.