அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினத்தை முன்னிட்டு, வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி (புதன்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வைகுண்டர் அவதாரம்

தென் மாவட்டங்களில் மிக முக்கிய ஆன்மீக நிகழ்வாகக் கருதப்படும் அய்யா வைகுண்டர் அவதார தினத்தன்று, சாமிதோப்பு பதி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிழல்தாங்கல்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்வதால், அவர்களின் வசதிக்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈடுசெய்ய வேலை நாள்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 4-ம் தேதி வழங்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், மார்ச் 14-ம் தேதி (சனிக்கிழமை) அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தும்.

வங்கிகள் மற்றும் அவசர கால சேவைகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும்.

கன்னியாகுமரியில் விடுமுறை:

அய்யா வைகுண்டரின் தலைமைப் பதி அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த நாளில் கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சாமிதோப்புக்கு பாதயாத்திரையாகச் செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.