மதுரை திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி பெருவிழா திருகல்யாண நிகழ்வு நடைபெற்றது. சுவாமிக்கும், தெய்வானைக்கும் இடையே நடந்த திருக்கல்யாண நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் தங்களது கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி தங்களது தாலி கயிறுகளை மாற்றிக்கொண்ட நிகழ்வும் நடைபெற்றது. முருகன் திருக்கல்யாணத்தை காணஅம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் புறப்பட்டதால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைக்கப்பட்டது.