Thirumavalavan: திமுக கூட்டணியை உடைக்க சதி.. பதவி ஆசை எங்களுக்கு இல்ல.. திருமாவளவன் பதிலடி!

1 week ago 2
ARTICLE AD

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றது ஏன் என்பதை அக்கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கூட்டணி ஆட்சி மலர்ந்துள்ளது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக கூட்டணியில் தொடர்ந்த இந்த 3 கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக வெளியேறி விட்டது. இதனிடையே விசிக அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு சென்றுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “விசிகவும், திமுகவும் எந்தளவுக்கு கொள்கை புரிதலோடு கைகோர்த்து களமாடியிருக்கிறோம் என்பதை நாடறியும். இந்த முடிவை நாங்கள் மேற்கொள்ள தன்னலம், பதவி ஆசை என்ற காரணங்கள் முதன்மையானவை அல்ல. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தான் காரணம் என்பதை மு.க.ஸ்டாலின் நன்கு அறிவார். நாங்கள் இப்படி ஒரு முடிவை எடுக்கிறோம் என்பதை அவரிடம் தெரிவித்தோம்.

தனிநபருக்காக எந்தவொரு முடிவையும் மேற்கொள்ள மாட்டோம் என்பதை உணர்த்தவே கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த முடிவை எடுக்குமோ அதை ஒட்டியே எங்கள் முடிவு இருக்கும் என கூறினோம். அதை மு.க.ஸ்டாலின், உதயநிதி என யாரும் எதிராக பார்க்கவில்லை. எதுவாக இருந்தாலும் நடைமுறைப்படுத்துங்கள் என்று கூறினார்கள். அதனால் தான் தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளோம்.

தவெக தரப்பில் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இரு கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என கூறினார்கள். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன். பெரும்பாலானோர் அமைச்சரவையில் இடம்பெறலாம் என தெரிவித்தனர். மே 9ம் தேதி ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தேன். ஆனால் விசிகவினர் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையில் தவெகவில் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது. கட்சியின் நலன்களை கருத்தில் கொண்டு நானும் அந்த நிலைப்பாட்டுக்கு இணங்கும் சூழல் உண்டானது.  இதில் வன்னி அரசை பரிந்துரைப்பது தான் சரியென பட்டது.

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுப்பது வழக்கம். தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணிக்கு என்னால் முடிந்ததை செய்தேன். என்னை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி திமுக கூட்டணியை உடைக்க பலர் முயற்சித்தார்கள். கடந்த 2 ஆண்டுகளாக என்னை குறிவைத்து திட்டமிட்டு பல விஷயங்களை மதவாத சக்திகள் செய்தனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்த முடிவை தடுக்க நினைக்கவில்லை. இன்றும் சமூக ஊடகங்களில் என்னை மட்டுமே குறிவைக்கின்றனர். விசிகவின் உரிமையையோ நேர்மையையோ களங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.

மேலும் அமைச்சரவையில் நான் இடம்பெற வேண்டும் என தவெகவினர் விரும்பினர். இப்போதும் அதில் எனக்கு உடன்பாடில்லை என்பதே உண்மையாகும்” என திருமாவளவன் கூறியுள்ளார்.

Read Entire Article