Thiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயில் நடந்த அதிர்ச்சி.. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்.. நடந்தது என்ன?

2 weeks ago 5
ARTICLE AD

தமிழ் கடவுளாகவும், அழகின் அம்சமாக போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு சுப்பிரமணிய சுவாமி கோயில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ளது. அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.

திருச்செந்தூர் முருகன் கோவில்

இக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து முருகன் அருளை பெறுகின்றனர். அதுவும் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சாமியை தரிசனம் செய்யவே 4 முதல் 5 மணி நேரம் ஆகிவிடும். இந்நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்திய, பிந்திய நாட்களில் கடல்நீர் உள்வாங்கிய பிறகு இயல்புநிலைக்கு திரும்புவது வழக்கம்.

இதையும் படிங்க: Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?

மகாளய அமாவாசை தர்ப்பணம்

இந்நிலையில் மகாளய அமாவாசை தினமான இன்று பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். அப்போது திடீரென திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடல் சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பச்சை நிற பாறைகள் அதிக அளவில் வெளியே காட்சி அளித்தன. மேலும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகள் மற்றும் தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் பாறைகள் மீது ஆபத்தை உணராமல் நின்று செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்து கொண்டனர்.

பாசி படிந்த பாறைகள்

பாசி படிந்த பாறைகளில் சிறுவர்கள் சைக்கிள் ஓட்டி விளையாடி மகிழ்ந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அலறியடிக்கொண்டு வெளியேறினார்.மேலும் கடல் உள்வாங்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க அறிவுறுத்தினர். கடலில் நீராடும் பக்தர்கள் கவனமான முறையில் நீராடுமாறு கோயில் நிர்வாகம் சார்பாக ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Read Entire Article