The Kerala Story 2: தி கேரளா ஸ்டோரி 2 படம்.. தமிழ்நாடு அரசுக்கு சீமான் பகிரங்க எச்சரிக்கை!

1 month ago 3
ARTICLE AD

‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “இஸ்லாமிய மக்களை மிகக்கேவலமாக இழிவுப்படுத்திப் பயங்கரவாதிகளாகக் கொலைகாரர்களாகச் சித்தரிக்கும்  ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் நீட்சியாக  கேரளா ஸ்டோரி-2 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கேரளா ஸ்டோரி 1 திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதித்தபோதே, அதனைக் கடுமையாக எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராடியது.

தற்போது 2ம் பாகத்தை திமுக அரசு தமிழ்நாடு முழுதும் திரையிட அனுமதித்திருப்பது வெட்கக்கேடானது. உலகம் முழுவதும் அவரவருக்கென்று ஒரு மதக் கோட்பாடு இருக்கிறது. ஒரு நாட்டிற்குள்ளேயே பல வழிபாட்டு முறைகள் உள்ளன. அவை அனைத்தையும் நாம் ஏற்கின்றோம், மதிக்கின்றோம். இந்நாட்டில் சகோதரத்துவத்துடன் வாழும் இஸ்லாமியர்களை, கிறித்தவர்களை தவறாகக் காட்டி வெறுப்பு நஞ்சினை விதைப்பதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

பணத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தால், ஒழுக்கமும், பண்பாடும் இருக்காது. அதேபோன்று சாதி, மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தால் அந்த நாட்டில் மனிதம் என்பதே மரித்துபோய், மக்களுக்கானசேவை என்பதே இல்லாமல் போகும். படிக்கத் தரமான கல்வி இல்லை, குடிக்கத் தூய குடிநீர் இல்லை, தலைநகரிலேயே தூய காற்று இல்லை. அனைத்து இயற்கை வளங்களையும் சுரண்டி தின்றுவிட்டு அதுபற்றியெல்லாம் எந்தக் கேள்வியும் எழுந்துவிடாது, மக்களின் கண்ணை மறைப்பதற்காகவே,  தொடர்ச்சியாகச் சாதிப்போதை, மதப்போதை, சாராயப்போதை, இதைப்போன்று திரைபோதையும் பின்புலத்திலிருந்து ஆட்சியாளர்களால்  மக்களுக்குள்  ஏற்றப்படுகிறது.

இஸ்லாமிய பெருமக்களை இழிவுப்படுத்தும் வழக்கமான குற்றக்காட்சிகளையும் தாண்டி, ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படம் கட்டாய மதமாற்றம், லவ்ஜிகாத், கூட்டுப்பாலியல், மாட்டுக்கறி திணிப்பு போன்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் இசுலாமிய மத அடையாளங்களை இணைத்து  திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எந்த இடத்திலும் நடக்காதவற்றைக் குரூர கற்பனையில் திரைப்படமாக எடுப்பவர்களின் நோக்கம்தான் என்ன?.. குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தைப் பிபிசி நிறுவனம் எடுத்தபோது அதைத் திரையிட பாஜக அரசு இந்தியா முழுக்கத் தடை செய்தது ஏன்?.. 'காஷ்மீர் பைல்ஸ்’, ‘புர்கா’ ‘கேரளா ஸ்டோரி1’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படமும் இஸ்லாமிய மதத்தினரையும், அவர்களின் வழிபாட்டு முறையினையும் திட்டமிட்டு இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மத மக்களை ஒட்டுமொத்தமாகக் குற்றவாளி கூண்டில் ஏற்றும்  காட்சிப்படுத்தல்கள் மத நல்லிணக்கத்திற்கும்,  பொது அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடியவை.
'கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தைத் திரையிட்டால் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் என்று திமுக அரசிற்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததா? இல்லையா? அதன்பிறகும் ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தைக் காவல்துறை பாதுகாப்புடன் வெளியிட அனுமதித்திருப்பது ஏன்?

படத்தை  தடை செய்யக் கேரள மாநில அரசு நீதிமன்றம்வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தும் நிலையில், அந்த திரைப்படத்தைக் காவல்துறை பாதுகாப்புடன் தமிழ்நாடு முழுதும் திரையிட   திமுக அரசு  அனுமதிப்பது ஏன்? இது குறித்து, திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள இசுலாமிய அமைப்புகள் இதுவரை வாய்த் திறவாமல் கள்ள அமைதிகாப்பது ஏன்?” என சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், ”தமிழ்நாட்டிலுள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு, நாங்கள் வைக்கும் வேண்டுகோள் மதக்கலவரத்தை தூண்டும் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தைத் தங்கள் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என்ற தீர்மானத்தை ஒருமனதாக எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read Entire Article