விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான ரவிக்குமார், தன் எக்ஸ் பக்கத்தில், விஜய் படத்தின் தலைப்பில் சனாதனமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளியானது தி கோட் திரைப்படம்:

விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படம் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் இன்று (செப்டம்பர் 5)வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் விஜய் தந்தை மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அதே போல் இந்த படத்தில் சினேகா,த்ரிஷா, மீனாட்சி சாவுத்ரி, பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இன்று வெளியான இந்த படத்தை ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் உற்சாகமாக கண்டுகளித்து வருகின்றனர். இந்த படம்தான் விஜய்யின் கடைசி படம் என அவரே சொல்லிவிட்டார். இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறின. விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் விஜய் கட்சி போட்டியிடுகிறது. இதனால் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகள் ஏதாவது இருக்குமா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்தது.

விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?

இந்நிலையில் விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? என கேள்வி எழுப்பி விசிக எம்பி ரவிக்குமார் சமூகவலைத்தள பக்கமான எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், 'விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?

விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?

The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?

‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்!

‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய்… pic.twitter.com/hJceOJVjYM

— Dr D.Ravikumar (@WriterRavikumar) September 5, 2024

The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157)' என குறிப்பிட்டுள்ளார்.