இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு புதிய கார் சந்தைக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இதுபோன்ற புதிய கார்களை ஒவ்வொரு நிறுவனமும் அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்தியா முழுவதும் அடுத்த மாதம் அறிமுகமாக உள்ள கார்களின் பட்டியலை கீழே காணலாம.

1. Mahindra Thar Facelift:

இந்திய வாகன சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக திகழும் மஹிந்திரா நிறுவனம் வரும் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்த உள்ள கார் இந்த Mahindra Thar Facelift ஆகும். இந்த கார் வரும் அக்டோபர் 2ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எஸ்யூவி ரக வாகனமான இந்த கார் ஏற்கனவே சந்தையில் உள்ள தார் காரை காட்டிலும் பல அம்சங்களை உள்ளடக்கி சந்தைக்கு வர உள்ளது. கம்பீரமான தோற்றத்துடன் காட்சி தரும் இந்த கார் சாதாரண சாலை மட்டுமின்றி மிகவும் மோசமான சாலையிலும், மலைப்பாதையிலும் செல்லும் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2. Mahindra Bolero Facelift:

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு Bolero ஆகும். இந்த காரின் அடுத்த அப்டேட்ட வெர்சனாக Mahindra Bolero Facelift கார் உள்ளது. இந்த கார் வரும் அக்டோபர் 6ம் தேதி அறிமுகப்படுத்த உ்ளது. இதன் வடிவமும், உட்கட்டமைப்பும் அசத்தலான வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜினில் பொருத்தப்பட்டுள்ளது. டேஷ்போர்ட் அதிநவீன வசதிகளுடன் ப்ளூடூத் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

3. Mahindra Bolero Neo Facelift:

மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று Bolero Neo. இந்த காரின் புதிய அப்டேட் வெர்சனாக Mahindra Bolero Neo Facelift காரை மஹிந்திரா நிறுவனம் வடிவமைத்துள்ளது. எஸ்யூவி ரக காரான இந்த கார் 10.25 இன்ச் திரையை கொண்டது. 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜினை கொண்டது. 100 எச்பி ஆற்றலும், 260 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது. மிகவும் வலுவானதாகவும், கம்பீரமாகவும் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய குடும்பத்தினர் சொகுசாக பயணிக்க இந்த கார் ஏதுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

4.Mini Countryman JCW:

மினி கூப்பர் காரின் புதிய வெர்சனாக இந்த Mini Countryman JCW சந்தைக்கு வருகிறது. இந்த கார் வரும் அக்டோபர் 14ம் தேதி சந்தையில் அறிமுகமாக உள்ளது. 2.0 லிட்டர் டர்போசார்ஜ் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 100 கி.மீட்டர் வேகத்தை 5.4 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது. வசீகரமான வடிவத்தில், நிறத்துடனும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

5. Skoda Octavia RS:

ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் வரும் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்த உள்ள கார் Skoda Octavia RS ஆகும். இந்த கார் வரும் அக்டோபர் 17ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

265 எச்பி குதிரை ஆற்றல் கொண்டது ஆகும். 6.4 நொடிகளில் 100 கி.மீட்டர் வேகத்தை இந்த கார் எட்டிவிடும். எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 13 இன்ச் ஸ்கிரீன் இதில் உள்ளது. 10 ஏர்பேக் பயணிகளின் வசதிக்காக இதில் பொருத்தப்பட்டுள்ளது.